ஆப்நகரம்

நகை வாங்கப் போறீங்களா? விலைய பாத்துட்டு போங்க!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Samayam Tamil 1 Aug 2021, 11:20 am
சமீப காலமாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தேவை குறைவாக இருந்தாலும் தங்கம் விலையில் பெரிய அளவில் சரிவு ஏற்படவே இல்லை. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக மாதத்தின் கடைசி நாளான நேற்று தங்கம் விலை குறைக்கப்பட்டது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil check latest gold price before buying chennai gold rate today 1st august 2021
நகை வாங்கப் போறீங்களா? விலைய பாத்துட்டு போங்க!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 1) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,548 ஆக உள்ளது. நேற்றும் இதே விலையில்தான் இருந்தது. அதேபோல, நேற்றைய முன்தினம் 36,552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 168 ரூபாய் குறைந்து 36,384 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் நேற்று குறைக்கப்பட்டது. நேற்றைய முன்தினம் 4,933 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் 4,912 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல 39,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 168 ரூபாய் குறைந்து 39,296 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,739 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,513 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,513 ஆகவும், கேரளாவில் ரூ.4,529 ஆகவும், டெல்லியில் ரூ.4,741 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,741 ஆகவும், ஒசூரில் ரூ.4,568 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,570 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை வெள்ளிக் கிழமையில் ரூ.73.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.73 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 73,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்