ஆப்நகரம்

Gold Rate Today: தங்கம் விலை இன்று உயர்வு: ஒரு கிராம் ரூ.3,196க்கு விற்பனை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,196 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Samayam Tamil 18 Feb 2019, 12:27 pm
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,196 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Samayam Tamil gold


சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்றம் நிலவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில், ஒரு சவரன் தங்கம் விலை ரூ.25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை சென்னையில் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.25,520-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்துள்ளது.

22 கேரட் தங்கத்தின் விலை!

இன்றைய நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,196 ஆகவும், சவரனுக்கு ரூ. 25,568-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று சவரனுக்கு 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையில் 24 கேரட் தூய தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.3,343 ஆகவும், சவரனுக்கு ரூ.26,744-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை!

வெள்ளி விலை இன்று கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்து 43.60 காசுகளுக்கும், கிலோ ரூ.43,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்