ஆப்நகரம்

Gold rate: சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை!!

விலைச் சரிவால் மக்கள் மகிழ்ச்சி!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 20 Sep 2021, 11:03 am
சமீப காலமாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று பெரிய அளவில் விலைச் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு 112 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold and silver price today in chennai tamil nadu 20th september 2021
Gold rate: சர்பிரைஸ் கொடுத்த தங்கம் விலை!!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 20) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,355 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,369 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 34,952 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 112 ரூபாய் குறைந்து 34,840 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,733 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,719 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 37,864 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 112 ரூபாய் குறைந்து 37,752 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,539 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,335 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,335 ஆகவும், கேரளாவில் ரூ.4,341 ஆகவும், டெல்லியில் ரூ.4,555 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,565 ஆகவும், ஒசூரில் ரூ.4,374 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,372 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.63.50 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்