ஆப்நகரம்

Gold Rate: நகை வாங்குவோரை அழவைக்கும் விலை!

விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 21 Sep 2021, 11:24 am
தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். இந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் விலையேற்றம் இருந்தது. ஆனால், வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக இரண்டாம் வாரத்தில் தொடர்ச்சியாக தங்கம் விலை குறைக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்களிலும் ஓரளவுக்கு தங்கம் விலை குறைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று தங்கம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold price hiked today at chennai check latest rates here 21st september 2021
Gold Rate: நகை வாங்குவோரை அழவைக்கும் விலை!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 21) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,360 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 34,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 112 ரூபாய் உயர்ந்து 34,992 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,724 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,738 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 37,792 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 112 ரூபாய் உயர்ந்து 37,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,513 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,340 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,340 ஆகவும், கேரளாவில் ரூ.4,335 ஆகவும், டெல்லியில் ரூ.4,545 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,555 ஆகவும், ஒசூரில் ரூ.4,356 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,357 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.20 ஆக இருந்தது. இன்று அது ரூ.63.80 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 63,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்