ஆப்நகரம்

Gold Rate in Chennai: மீண்டும் விலை குறைவு - இதுதான் சரியான டைம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.

Samayam Tamil 21 Sep 2020, 11:09 am
தங்கத்தின் விலை கடந்த வாரம் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் திடீரென செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் விலை உயரத் தொடங்கியது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்க்கலாம்.
Samayam Tamil gold rate in chennai tamilnadu 22k 24k gold silver rate on september 21st 2020 gold prices dip
Gold Rate in Chennai: மீண்டும் விலை குறைவு - இதுதான் சரியான டைம்!


​ஆபரணத் தங்கத்தின் விலை

நேற்று வரை ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,958ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,934க்கு விற்பனை செய்யப்படுகிறது. எட்டு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.39,472க்கு விற்பனை செய்யப்படுகிறது.

​தூய தங்கத்தின் விலை

நேற்று வரை ஒரு கிராம் தூய தங்கத்தின் விலை ரூ.5,206ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு ரூ.24 குறைந்து ஒரு கிராம் தூய தங்கம் ரூ.5,182க்கு விற்பனை செய்யப்படுகிறது. எட்டு கிராம் தூய தங்கம் ரூ.41,456க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை

வெள்ளியின் விலை கடைசியாக செப்டம்பர் 18ஆம் தேதியன்று கிராம் ரூ.70.30ஆக இருந்தது. அதன்பின் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.70ஆக குறைக்கப்பட்டது. இன்று வரை இந்த விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.70ஆக இருக்கிறது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.70,000ஆக இருக்கிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்