ஆப்நகரம்

உடனே நகை கடைக்கு ஓடுங்க.. அதிரடி விலைச் சரிவு!

அட்சய திரிதியையில் நல்ல செய்தி!

Samayam Tamil 3 May 2022, 9:55 am
இன்று அட்சய திரிதியை. நகை வாங்க நல்ல நாள். இன்று நகை விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Samayam Tamil gold rate is very much low on akshaya tritiya day today 3rd may 2022
உடனே நகை கடைக்கு ஓடுங்க.. அதிரடி விலைச் சரிவு!


ஆபரண தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (மே 3) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,816 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,841 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 38,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 200 ரூபாய் குறைந்து 38,528 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 5,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,215 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 41,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 200 ரூபாய் குறைந்து 41,720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,730 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,730 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,730 ஆகவும், கேரளாவில் ரூ.4,842 ஆகவும், டெல்லியில் ரூ.4,730 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,730 ஆகவும், ஒசூரில் ரூ.4,908 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,906 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.67.30 ஆக இருந்தது. இன்று அது ரூ.67 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 67,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்