ஆப்நகரம்

தங்கம் விலை: கண்ணீர் விட வைக்கும் விலையேற்றம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

Curated byசெந்தில் குமார் | Samayam Tamil 27 Sep 2021, 11:29 am
கடந்த சில நாட்களாகவே சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. நேற்றுதான் சவரனுக்கு 16 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்றும் விலையேற்றம் நீடிக்கிறது. இதனால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold silver price today in chennai tamil nadu 27th september 2021
தங்கம் விலை: கண்ணீர் விட வைக்கும் விலையேற்றம்!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (செப்டம்பர் 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,369 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,364 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 34,912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 40 ரூபாய் உயர்ந்து 34,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

பேசும் அரிய பொக்கிஷங்கள்; அடையாளமாய் விளங்கும் பாரம்பரிய கடை!

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 4,728 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,733 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, 37,824 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் இன்று 40 ரூபாய் உயர்ந்து 37,864 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


2500 பேருக்கு வேலை... தனியார் வங்கி அறிவிப்பு!

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,524 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,328 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,328 ஆகவும், கேரளாவில் ரூ.4,322 ஆகவும், டெல்லியில் ரூ.4,435 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,590 ஆகவும், ஒசூரில் ரூ.4,365 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,367 ஆகவும் இருக்கிறது.

பெட்ரோல் விலை: வாகன ஓட்டிகளுக்கு செம ஷாக் நியூஸ்!

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.64.10 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.70 ஆக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வாட்ஸ் ஆப்பில் பணம் அனுப்பினால் கேஷ் பேக்!

எழுத்தாளர் பற்றி
செந்தில் குமார்
செந்தில் குமார், கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன். கடந்த 7 வருடங்களாக ஊடகத் துறையில் பணியாற்றி வருகிறேன். தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா சமயம் தமிழ் தளத்தில் வணிக செய்திகள் எழுதி வருகிறேன். விளையாட்டுச் செய்திகள் எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். சீனியர் டிஜிட்டல் கண்டெண்ட் புரோடியூசராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்