ஆப்நகரம்

நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது விலை!

இன்றைய தங்கம் விலை!

Samayam Tamil 16 May 2022, 10:00 am
தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் கவலையடைந்துள்ளனர். சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil gold silver rate today 16th may in chennai tamil nadu price hike again
நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது விலை!


ஆபரண தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (மே 16) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,744 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 4,737 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 37,896 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 56 ரூபாய் உயர்ந்து 37,952 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று 5,136 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 5,143 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல, நேற்று 41,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 56 ரூபாய் உயர்ந்து 41,144 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,635 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,635 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,635 ஆகவும், கேரளாவில் ரூ.4,626 ஆகவும், டெல்லியில் ரூ.4,635 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,635 ஆகவும், ஒசூரில் ரூ.4,744 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,842 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.63.70 ஆக இருந்தது. இன்று அது ரூ.64.50க்கு வந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 64,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குடும்பத் தலைவிகள் கவலை!

பெட்ரோல் விலை, பால் விலை, எண்ணெய் விலை, காய்கறி விலை என எல்லாப் பக்கமும் விலை உயர்வு இருக்கும் சூழலில் தங்கம் விலையும் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

எப்போது குறையும்?

அட்சய திருதியை நாளை முன்னிட்டு தங்கம் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டது. அந்த நாளில் போட்டி போட்டுக்கொண்டு நகை வாங்கினர். ஆனால் அடுத்து வந்த நாட்களில் தொடர்ச்சியான விலையேற்றம் நீடிக்கிறது. ஏதோ ஒரு நாள் குறைந்தாலும் அடுத்த நாளே மிகப் பெரிய அளவில் உயர்த்தப்படுகிறது. இதனால் தங்கம் விலை அடுத்து எப்போது குறையும் என்று காத்திருக்கின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்