ஆப்நகரம்

நகை வாங்க சூப்பர் சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க!

தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி!

Samayam Tamil 9 Dec 2021, 10:50 am
சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற பிரச்சினைகள் முடிந்தாலும் தங்கம் விலை உயர்வு வாடிக்கையாளர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக தங்கம் விலை மிகப் பெரிய அளவில் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.
Samayam Tamil happy news to gold buyers today chance to buy gold silver at cheap rates 9 december 2021
நகை வாங்க சூப்பர் சான்ஸ்... மிஸ் பண்ணிடாதீங்க!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (டிசம்பர் 9) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,514 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,530 ரூபாயாக இருந்தது. அதேபோல, நேற்று 36,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் 128 ரூபாய் குறைந்து 36,112 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

தூய தங்கத்தின் விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 4,894 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தூய தங்கம் இன்று 4,878 ரூபாயாகக் குறைந்துள்ளது. அதேபோல, நேற்று 39,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் தூய தங்கம் 128 ரூபாய் குறைந்து 39,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

மற்ற நகரங்களில் தங்கத்தின் விலை!

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை மும்பையில் ரூ.4,684 ஆகவும், பெங்களூருவில் ரூ.4,495 ஆகவும், ஹைதராபாத்தில் ரூ.4,495 ஆகவும், கேரளாவில் ரூ.4,497 ஆகவும், டெல்லியில் ரூ.4,710 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.4,710 ஆகவும், ஒசூரில் ரூ.4,525 ஆகவும், பாண்டிச்சேரியில் ரூ.4,524 ஆகவும் இருக்கிறது.

வெள்ளியின் விலை!

வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.65.50 ஆக இருந்தது. இன்றும் அதே விலையில் நீடிக்கிறது. ஒரு கிலோ வெள்ளி 65,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்