ஆப்நகரம்

தங்கம் விலை: மீண்டும் எகிற அடிக்கத் தொடங்கியிருச்சு!

மீண்டும் ஏற்றம்!

Samayam Tamil 14 Aug 2020, 12:43 pm
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 280 ரூபாய் அதிகரித்துள்ளது. தொடர்ந்து ஐந்து நாள்களாக விலை குறைந்து வந்ததால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால் நேற்று சிறிய அளவில் விலை ஏற்றம் காணப்பட்டது. இந்நிலையில் இன்று விலை அதிகரித்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கத்தின் இன்றைய விலை என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...
Samayam Tamil today 14th august 2020 gold 22ct 24ct and silver rate increased in chennai tamil nadu
தங்கம் விலை: மீண்டும் எகிற அடிக்கத் தொடங்கியிருச்சு!


ஆபரணத் தங்கத்தின் விலை!

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 14) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 5,111 ஆக விற்கப்படுகிறது. நேற்று இதன் விலை 5,076 ரூபாயாக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்துள்ளது.

அதேபோல, நேற்று 40,608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 280 ரூபாய் அதிகரித்து 40,888 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தூய தங்கத்தின் விலை!

ஆபரணத் தங்கத்தைப் போலவே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்துள்ளது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை (ஒரு கிராம்) நேற்று ரூ.5,330லிருந்து இன்று ரூ.5,367 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, 8 கிராம் தூய தங்கம் நேற்று 42,640 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், இன்று 288 ரூபாய் அதிகரித்து 42,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Share Market: வேகம் காட்டும் சென்செக்ஸ்... இன்று பெஸ்ட் பங்குகள் இவைதான்!


வெள்ளியின் விலை!

வெள்ளி விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.76.40லிருந்து இன்று ரூ.76.70 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 76,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்