ஆப்நகரம்

வருமான வரி செலுத்தியோருக்கு பணம்.. உங்களுக்கு வந்துச்சா?

வருமான வரி ரீஃபண்ட் தொகையாக ரூ.1.92 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

Samayam Tamil 17 Mar 2022, 12:08 pm
வருமான வரி செலுத்தியோருக்கு வரவேண்டிய ரீஃபண்ட் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மார்ச் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 2.24 கோடிப் பேருக்கு ரீஃபண்ட் தொகையாக ரூ.1.92 லட்சம் கோடி வழங்கப்பட்டுவிட்டதாக வருமான வரித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil it refund


மொத்தமாக வழங்கப்பட்டுள்ள ரீஃபண்ட் தொகையில், தனிநபர் வருமான வரியாக மொத்தம் ரூ.70,373 கோடியும், கார்பரேட் வருமான வரியாக மொத்தம் ரூ.1.21 லட்சம் கோடியும் வழங்கப்பட்டுள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள ரீஃபண்ட் தொகையில், 2021-22 வரி ஆண்டுக்கான ரீஃபண்ட் தொகை ரூ.37,961.19 கோடியும் இதில் அடங்கும். மொத்தம் 1.83 கோடிப் பேருக்கு இத்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்திலும் தகவல் வெளியிட்டுள்ளது.

வருமான வரி தாக்கலைப் பொறுத்தவரையில், 2020-21 நிதியாண்டில் மார்ச் 15ஆம் தேதி வரையில் மொத்தம் 6.63 கோடிப் பேர் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது சென்ற நிதியாண்டின் இதே காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி எண்ணிக்கையை விட 1.67 லட்சம் அதிகமாகும். கார்பரேட் வருமான வரி தாக்கலுக்கான கடைசி நாள் 2022 மார்ச் 15ஆம் தேதியாக இருந்தது. அதேபோல, தனிநபர் வருமான வரித் தாக்கலுக்கான கடைசி நாள் 2021 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்
டிரெண்டிங்