ஆப்நகரம்

வருமான வரி ரீஃபண்ட் வரவில்லையா? இதுதான் காரணம்!

இதைச் செய்தால் ரீஃபண்ட் தொகை சரியாகக் கிடைக்கும்.

Samayam Tamil 18 Jan 2021, 5:44 pm
உங்களுக்கு வருமான வரி ரீஃபண்ட் சரியான நேரத்தில் கிடைக்கவில்லையென்றால் என்ன செய்வீர்கள்? வரி தாக்கலின் போது நீங்கள் செய்யும் சிறு தவறால் உங்களுக்கு ரீஃபண்ட் தொகை வராமல் போகலாம். எனவே இந்தத் தவறுகளை நீங்கள் செய்யாமல் கவனமுடன் இருந்தால் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
Samayam Tamil check these common mistakes to get it refund
வருமான வரி ரீஃபண்ட் வரவில்லையா? இதுதான் காரணம்!


வங்கிக் கணக்கில் பிரச்சினை!

நீங்கள் செலுத்தும் வருமான வரி ரிட்டனுக்கான ரீஃபண்ட் தொகையை வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வருமான வரித் துறை நேரடியாக டெபாசிட் செய்கிறது. எனவே வருமான வரி தாக்கலின்போது வங்கிக் கணக்கு விவரத்தை சரியாக வழங்காவிட்டால் உங்களது ரீஃபண்ட் தொகை சிக்கிவிடும். எனவே இதில் ஏற்படும் பிழைகளை ஆன்லைன் மூலமாகவே சரிசெய்யலாம். அதேபோல, வருமான வரி தாக்கலில் வழங்கும் வங்கிக் கணக்கு பான் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதையும் உறுதிசெய்ய வேண்டும்.

முன்கூட்டிய சரிபார்ப்பு!

வங்கிக் கணக்கு விவரத்தை வரி தாக்கலின்போது குறிப்பிடுவது மட்டுமல்லாமல், அந்த வங்கிக் கணக்கு சரிபார்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும். அவ்வாறு சரிபார்க்கப்படாவிட்டாலும் ரீஃபண்ட் தொகை வருவதில் பிரச்சினை ஏற்படும். எனவே வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கு எண்ணை வருமான வரித் துறையிடம் சரிபார்க்க வேண்டும். வரித் தாக்கலுக்குப் பிறகு வருமான வரித் துறையிடமிருந்து வரும் தொகை இந்த வங்கிக் கணக்குக்கே வரும்.

ஐடிஆர் சரிபார்ப்பு!

வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்த பிறகு அதை வெரிஃபை செய்வது கட்டாயமாகும். வரி செலுத்த வேண்டிய காலத்தில் வரி செலுத்தினாலும் அதை வெரிஃபை செய்யாமல் பிரச்சினை ஏற்படும் புகார்கள் அதிகமாக உள்ளன. இதனாலும் ஐடி ரீஃபண்ட் தொகை உங்களுக்கு வராமல் போகலாம். எனவே வருமான வரி ரீஃபண்ட் தொகை உங்களுக்கு முறையாக வரவேண்டுமானால் வரி தாக்கல் செய்தவுடன் அதை வெரிஃபை செய்ய வேண்டும்.

ரீஃபண்ட் செக்!

ஒருவர் வருமான வரியைத் தாக்கல் செய்து அவருக்கு ரீஃபண்ட் தொகை வந்து சேராவிட்டால் அதுகுறித்து வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்தில் பரிசோதிக்க வேண்டும். லாகின் ஐடி, பாஸ்வேர்டு மற்றும் பான் எண் இருந்தாலே இதைச் சரிபார்த்து அதற்கு புகாரளிக்க முடியும். இதன் மூலம் ரீஃபண்ட் தொகை சிக்கிக்கொள்ளாமல் தவிர்க்கலாம்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்