ஆப்நகரம்

மோடியின் குட் நியூஸ்: நேர்மையாக வரி செலுத்தினால் இது கிடைக்கும்!

நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிப்பதற்கான புதிய திட்டத்தை பிரதமர் மோடி இன்று அறிமுகப்படுத்தினார்.

Samayam Tamil 13 Aug 2020, 12:27 pm

வரி முறையை வெளிப்படைத்தன்மையாக மாற்றவும், நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவிக்கவும் ‘Transparent Taxation - Honoring the Honest' என்ற புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தி வைத்தார். இந்த திட்டம் வரி முறையை சீர்திருத்தி வரி இணக்கத்தை எளிதாக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil நரேந்திர மோடி


இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியபின் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நேர்மையாக வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டிஜிட்டல் முறையில் வரி மதிப்பீடு, மேல்முறையீடு, வரி செலுத்துவோருக்கென தனி சாசனம் ஆகியவை புதிய திட்டத்தின் அங்கங்கள்.

டிஜிட்டல் வரி மதிப்பீட்டு முறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் மேல்முறையீட்டு முறை செப்டம்பர் 25ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். வரி செலுத்தாதவர்களிடம் வரியை வசூலிப்பதும், பாதுகாப்பில்லாதவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதுமே நமது நோக்கம். வரி முறையை எளிமையாக்குவதே நமது முயற்சி.

வருமான வரி செலுத்துவோருக்கு ஹேப்பி நியூஸ்!

வரி செலுத்துவோருக்கான சாசனம் நாட்டின் வளர்ச்சி பயணத்தில் பெரிய படி. சட்டங்களையும், கொள்கைகளையும் மக்களை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதுதான் நமது புதிய ஆட்சிமுறை. இதன் பயன்களை தற்போது நாடே அனுபவித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.

இப்புதிய திட்டம் குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியபோது, “வரிமுறையை வெளிப்படைத்தன்மையுடன் மாற்றி, வரி செலுத்துவோரை கவுரவிப்பதே பிரதமர் மோடியின் திட்டம். இதற்காக, மத்திய நேரடி வரிகள் வாரிய புதிய செயல்திட்டத்தை உருவாக்கி நடைமுறைப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்