ஆப்நகரம்

குறைந்த முதலீட்டில் மாத வருமானம் வேண்டுமா? அப்போ இந்தத் திட்டத்தில் பணத்தை போடுங்க!!

மாத வருமானத்திற்கு வழிகாட்டும் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புத் திட்டங்கள் இவைதான்.

Samayam Tamil 10 Aug 2022, 10:04 am
மியூச்சுவல் ஃபண்டிற்கு புதிதாக வரும் நபர்கள் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுவது ஈக்விட்டி வகை மியூச்சுவல் ஃபண்டுகளில் தான். அதிலும் நீண்டகால முதலீடுகளுக்குத் திட்டமிடுபவரெனில் லார்ஜ்கேப் ஃபண்டுகளில் (large cap)அதிகம் முதலீடு செய்கின்றனர்.
Samayam Tamil Mutual fund 3


அதே சமயம் மியூச்சுவல் ஃபண்டில் நல்ல அனுபவம் உடையவர்கள் கலவையான ஃபண்டுகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். அத்தகைய முதலீட்டாளர்கள் லார்ஜ்கேப் மற்றும் மிட் கேப் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். பலரும் மாதம் மாதம் ஒரு வருமானம் ஈட்டும் சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்யவே விரும்புவர்.

அதற்கு இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள ஹைப்ரிட் ஃபண்டுகளில் மாதம் நீங்கள் ரூ.1000 முதல் ரூ.5000 வரை SIP மூலம் முதலீடு செய்து வந்தால், 3 அல்லது 5 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு அதன் லாபத்தை மாதம் மாதம் உங்களுக்கு கிடைக்கும். அதற்குமுன் ஹைப்ரிட் ஃபண்ட் பற்றிய விளக்கத்தைக் காணலாம்.

கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் ஃபண்ட் (conservative hybrid mutual funds) என்றால் என்ன?

ஹைப்ரிட் ஃபண்டுகள் என்பது ஒன்றுக்கும் மேற்பட்ட சொத்து வகைகளில் முதலீடு செய்யும் ஒரு திட்டமாகும். அதாவது ஈக்விட்டி, கடன் மற்றும் இதர சொத்து வகுப்புகள் திட்டத்தின் முதலீட்டு நோக்கத்தைப் பொறுத்தது.

இந்த நிதிகள் பல்வேறு சொத்து வகுப்புகளின் கலவையில் முதலீடு செய்து போர்ட்ஃபோலியோவை முதலீடு செய்வதால் சந்தை அபாயத்தை குறைக்கும். அதனால் முதலீடுகள் மீது லாபம் அதிகம் கிடைக்கும்.

2022 இல் முதலீடு செய்யச் சிறந்த கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் மியூச்சுவல் ஃபண்டுகளின் பட்டியல்:

1. ஐசிஐசிஐ ப்ருடெண்ஷியல் ரெகுலர் சேவிங்ஸ் ஃபண்ட் (ICICI Prudential Regular Savings Fund)

2. கனரா ரோபேக்கோ கன்சர்வேட்டிவ் ஹைப்ரிட் ஃபண்ட் (Canara Robeco Conservative Hybrid Fund)

3. கோடக் டெட் ஹைப்ரிட் ஃபண்ட் (Kotak Debt Hybrid Fund)

4. எஸ்பிஐ டெட் ஹைப்ரிட் ஃபண்ட் (SBI Debt Hybrid Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்