ஆப்நகரம்

100 ரூபாய் போதும்.. உங்கள் அவசரக் காலத்திற்கு உதவும் சேமிப்பு திட்டங்கள் இதுதான்!!

குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட் சிப் திட்டங்கள்

Samayam Tamil 30 Sep 2022, 2:02 pm
எதுவும் உறுதி இல்லாத இவ்வுலகில், உங்கள் செல்வத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில் நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் முதலீட்டுத் திட்டங்களைப் பற்றித் தெரிந்து வைத்துக் கொள்வது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாகும்.
Samayam Tamil investments under Rs.100


தற்போதுள்ள தொற்றுநோய், போர், உலகளாவிய விநியோகச் சங்கிலி சீர்குலைவுகள் போன்றவற்றால் சேமிப்பு என்பது அனைவரின் வாழ்விலும் முக்கியமான ஒன்றாக உள்ளது.

அதிலும் குறைந்த முதலீட்டில் வருங்காலத்திற்காகச் சேமிக்க ஒரு சிறந்த இடமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. அதிலும் டெட் ஃபண்டுகள் நிலையான வருமானத்தை அளிக்கவில்லை என்றாலும் உடனடி தேவைகளுக்கு சேமிக்க உதவும் திட்டங்களாக இருக்கும்.

அதிலும் சந்தை அபாயங்கள் குறைந்த இரண்டு மியூச்சுவல் ஃபண்ட் மார்க்கெட் ஃபண்டுகள் கடந்த இரண்டு வருடங்களாக 15% லாபத்தை அளித்துள்ளது.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1b7b9gg&height=360&width=640

1. நிப்பான் இந்தியா மணி மார்க்கெட் ஃபண்ட் (Nippon India Money Market - Direct Plan-Growth

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சிப் முதலீடு ரூ.100 ஆகும். இந்த ஃபண்டில் 5 முதல் 7 வருடங்களுக்கு சிப் முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. குறுகிய காலம் எனில் 3 வருடங்களாவது முதலீடு செய்ய வேண்டும்.

2. எடெல்விஸ் மணி மார்க்கெட் ஃபண்ட் (Edelweiss Money Market Fund - Direct Plan-Growth)

இந்த பண்டிற்கான குறைந்தபட்ச சிப் முதலீடு ரூ.500 ஆகும். இந்த ஃபண்டில் 3 முதல் 5 வருடங்களுக்கு சிப் முறையில் முதலீடு செய்வது நல்ல லாபத்தை அளிக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த ஃபண்டில் லாக்-இன் காலம் என்று எதுவுமில்லை. வெளியேற்றக் கட்டணமும் இல்லை.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்