ஆப்நகரம்

ஜோரான பென்சன் திட்டம்..500 ரூபாயில் உங்க லைஃப் செட்டில்..விட்ராதீங்க மக்கா!

எதிர்கால ஓய்வூதியத்திற்கான சிறப்பான பென்சன் ஃபண்ட் இதுதான்.

Samayam Tamil 18 May 2022, 9:44 am
நீங்கள் தனியார் அல்லது அரசு நிறுவனத்தில் வேலை செய்தாலும் உங்கள் சமபளத்திலுருந்து ஒரு பகுதி பென்சனுக்காக பிடித்தம் செய்யப்படும். எல்லா நிறுவனங்களும் பென்சன் திட்டத்தை அவர்களின் ஊழியர்களுக்குத் தருகிறதா என்றால் இல்லை என்பதே உண்மை.
Samayam Tamil WhatsApp Image 2022-05-18 at 7.06.24 AM.


இந்தியாவில் சிறு மற்றும் குறு நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவே சம்பளம் தரும் நிலையில் ஓய்வூதியத்துக்கென ஒரு தொகையை ஊழியர்களுக்கு அளிப்பதில்லை. அப்படியிருக்க உங்கள் நிறுவனம் உங்களுக்கு பென்சன் தொகையை ஒதுக்கவில்லை என்றால் கவலைப்படத் தேவையில்லை.

நீங்களே உங்களுக்கான பென்சன் தொகையைத் தனியாகத் துவங்கலாம். மேலுமுங்கள் நிறுவனம் பிடித்தம் செய்யப்படும் பென்சன் தொகை உங்களுக்கு போதுமானதாக இல்லையென்றால் நீங்களும் இந்த பென்சன் ஃபண்டில் முதலீடு செய்து அதிகமான பென்சன் தொகையை பெறலாம்.

அதிலும் பெரும் தொகையெல்லாம் இல்லாமல் வெறும் 500 ரூபாயில் பென்சன் திட்டம் இருக்கிறதென்றால் அது ஒரு நல்ல விஷயம் தானே. அதிலும் இந்த பென்சன் ஃபண்டில் முதலீடு செய்தால் 10.25% சராசரி ஆண்டு லாபத்தை நீங்கள் பெறுவது உறுதி.

இங்குக் குறிப்பிடப்படும் பென்சன் ஃபண்டானது பிரபல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது.

ஃபிராங்க்ளின் இந்தியா பென்சன் பிளான் (Franklin India Pension Plan - Direct-Growth):

இந்த ஃபண்ட் ஃபிராங்க்ளின் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்ட் நடுத்தர சந்தை அபாயங்களைக் கொண்டுள்ளதால் நீண்டகால முதலீடுகளுக்கேற்ற ஒரு ஃபண்டாகும்.

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச SIP மற்றும் Lumpsum முதலீட்டுத் தொகை ரூ.500 ஆகும். நீங்கள் 58 வயது வரை இந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

உதாரணமாக உங்களுக்கு 30 வயது எனில் இந்த ஃபண்டில் நீங்கள் மாதந்தோறும் ரூ.500 முதலீடு செய்தால் உங்களின் 58 வயதில் நீங்கள் இந்த ஃபண்டில் ரூ.1,85,000 வரை லாபம் பெறலாம்.

இதில் நீங்கள் முதலீடு செய்த மொத்தத்தொகை ரூ. 1,68,000 ஆக இருக்கும் ஆக உங்கள் முதலீட்டின் மீதான லாபமானது ரூ.17,000 ஆக இருக்கும். ஆனால் இத்தொகையைக் காட்டிலும் நீங்கள் அதிகமும் பெறலாம். அது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் உயரும் போது நீங்கள் இன்னும் அதிகமான லாபத்தைக் கூட எதிர்பார்க்கலாம்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்