ஆப்நகரம்

அடுத்த 3 ஆண்டுக்குள் பணம் சேமிக்க வேண்டுமா.. இந்த திட்டங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்!

3 முதல் 5 ஆண்டுகளில் அதிக லாபம் தரும் SIP திட்டங்கள் குறித்து இங்குக் காணலாம்.

Samayam Tamil 23 Mar 2023, 5:08 pm
மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்குப் பணத்தைச் சேமித்து வைக்கும் சிறந்த டெட் ஃபண்டை தேடுகிறீர்களா? நீங்கள் சில சந்தை அபாயங்களுடன் கூடிய முதலீடுகளில் முதலீடு செய்யத் தயாராக உள்ளீர்களா? அப்படியானால், நடுத்தர கால மியூச்சுவல் ஃபண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யலாம்.
Samayam Tamil Short term saving plans


ஆனால் டெட் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்முன் இந்த திட்டங்கள் நிலையற்றவை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் வரும் மாதங்களில் வட்டி விகிதங்கள் மேலும் உயரக்கூடும். பொருளாதாரத்தில் பணவீக்க அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மீண்டும் விகிதங்களை உயர்த்த வாய்ப்புள்ளதால் கவனமாக முதலீடு செய்ய வேண்டும்.

செபியின் (SEBI) ஆணைப்படி, நடுத்தர கால நிதிகள் கடன் மற்றும் பணச் சந்தை கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால் மூன்று மற்றும் நான்கு ஆண்டுகள் மேலே முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால் நீங்கள் மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஏற்ற மியூச்சுவல் ஃபண்டுகளை இங்குக் காணலாம். இருப்பினும், உங்கள் முதலீட்டு எல்லைக்கு இணங்க திட்டம் உள்ளதா என்பதை உறுதிசெய்யவும். அதேசமயம் திட்டத்தின் போர்ட்ஃபோலியோ கால அளவை நீங்கள் சரிபார்க்க வேண்டும்.

குறுகிய காலத்தில் முதலீடு செய்ய ஏற்ற மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

1. எஸ்பிஐ மேக்னம் மீடியம் டூரேசன் ஃபண்ட் (SBI Magnum Medium Duration Fund)

2. ஹெச்டிஎஃப்சி மீடியம் ட்ரெம் டெட் ஃபண்ட் (HDFC Medium Term Debt Fund)

3. ஐடிஎஃப்சி பாண்ட் ஃபண்ட் (IDFC Bond Fund Medium Term Plan)

4. ஆக்சிஸ் ஸ்ட்ரேட்டஜிக் பாண்ட் ஃபண்ட் (Axis Strategic Bond Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்