ஆப்நகரம்

90’s கிட்ஸ்களுக்கேற்ற டாப் 4 முதலீட்டுத் திட்டங்கள் இவைதான்!!

இளைஞர்களுக்கேற்ற மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புத் திட்டங்கள்

Samayam Tamil 17 Aug 2022, 4:12 pm
இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பக்கம் பல இளம் தலைமுறையினரின் ஈடுபாடும் அதிகமாகவே உள்ளது.
Samayam Tamil 90s kids savings fund


அதிலும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்டுவதற்கு ஓரளவு பாதுகாப்பான இடமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் உள்ளன. சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதன் ஆரம்பக் காலத்திலிருந்தே நல்ல வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகிறது.

சமீபத்திய பணவீக்கம், விலைவாசி உயர்வுகள் மற்றும் பெட்ரோல், டீசல் விலை ஏற்றங்களால் மாதாந்திர சம்பளம் வாங்கும் இளைஞர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு பெரும் சவாலாக உள்ளது. இதுபோன்ற சூழலில் மாத சம்பளம் மட்டுமே போதாது. பணம் சம்பாதிக்க வேறு ஆதாரங்கள் தேவை. உங்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த நேரத்தில் கை கொடுக்கலாம்.

குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று காலங்களில் சில மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி திட்டங்கள் 100% லாபத்தை அளித்து வருகின்றன. அதிலும் குறிப்பாகா ரூ.100 முதல் ரூ.500 வரை முதலீட்டுத் தொகையில் அவை சாத்தியமாக்கியுள்ளன.

2022 இல் முதலீடு செய்யச் சிறந்த மியூச்சுவல் ஃபண்டுகளின் பட்டியல்:

1. இன்வெஸ்கோ இந்தியா காண்ட்ரா ஃபண்ட் (Invesco India Contra Fund)

2. ஐடிஎஃப்சி ஸ்டெரிலிங் வேல்யூ ஃபண்ட் (IDFC Sterling Value Fund)

3. நிப்பான் இந்தியா வேல்யூ ஃபண்ட் (Nippon India Value Fund)

4. ஐசிஐசிஐசி ப்ரெடெண்சியல் வேல்யூ டிஸ்கவரி ஃபண்ட் (ICICI Prudential Value Discovery Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்