ஆப்நகரம்

3 ஆண்டுகளில் 28% லாபம்.. மாஸ் காட்டும் ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள்!!

கடந்த 3 ஆண்டுகளில் ஸ்மால்கேப் ஃபண்டுகள் 28% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Samayam Tamil 11 Aug 2022, 3:20 pm
மியூச்சுவல் ஃபண்ட் வகைகளில் ஸ்மால் கேப் ஃபண்டுகள் (Small cap mutual fund) முதலீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் அதிகபட்சமாக 28% வழங்கியுள்ளது.
Samayam Tamil Mutual fund


அதனை அடுத்து ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்கள் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஃபண்டுகளின் வருமானம் ஈக்விட்டி பிரிவில் அதிகம் இருக்கும்.

ஒரு முதலீட்டாளர் நிலையற்ற தன்மையைப் பொறுத்துக்கொள்ளும் பொறுமை மற்றும் சில கூடுதல் ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தால், இந்த ஃபண்டுகளில் அதிக லாபத்தை ஈட்ட முடியும்.

மியூச்சுவல் ஃபண்ட் டிராக்கிங் நிறுவனமான வேல்யூ ஆராய்ச்சி வெளியிட்டுள்ள அறிக்கைகளின்படி ஸ்மால்கேப் ஃபண்டுகள் கடந்த மூன்று ஆண்டுகளில் 28.59% லாபத்தை வழங்கி வழங்குகின்றன.

இந்த பிரிவில் உள்ள 12 திட்டங்கள் 30 சதவீதத்திற்கும் அதிகமான வருமானத்தை அளித்து வருகின்றன. இதில் குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் 44.11% அதிக வருமானத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது.

அதைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட் 38.90 சதவீதத்தையும், கனரா ரோபெகோ ஸ்மால் கேப் ஃபண்ட் 38.61 சதவீதம் வருமானத்தையும், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஸ்மால் கேப் ஃபண்ட் 18.20 சதவீத வருமானத்தை வழங்கி வருகிறது.

ஸ்மால் கேப் திட்டங்கள் பொதுவாக ஏற்ற இறக்கக் கண்ணோட்டத்தில் அதிக ஆபத்துடன் வருகின்றன. இருப்பினும் Large CAP நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் அவை நீண்ட காலத்திற்குச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்