ஆப்நகரம்

சரிவில் ஐடி துறைகள்.. 20% மேல் நஷ்டம்.. பெரும் சோகத்தில் முதலீட்டாளர்கள்!!

ஐடி பிரிவைச் சேர்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள் 20% வரை சரிவை சந்தித்துள்ளன.

Samayam Tamil 2 Dec 2022, 2:55 pm
மியூச்சுவல் ஃபண்டில் பார்மா ஃபண்டுகள், ஐடி ஃபண்டுகள் மற்றும் சர்வதேச நிதிகள் என கடந்த இரண்டு ஆண்டுகளில் மிகவும் பிரபலமாக இருந்த மூன்று துறை ஃபண்டுகளின் வெற்றித் தொடர் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
Samayam Tamil IT stocks fall


இந்த மூன்று பிரிவுகளும் கடந்த ஓராண்டில் இல்லாத அளவிற்குச் சரிவைச் சந்தித்துள்ளன. அதனைத் தொடர்ந்து மற்ற மியூச்சுவல் ஃபண்டுகள் பக்கம் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர்.

2022 ஆம் ஆண்டில் ஐடி துறை ஃபண்டுகள் சுமார் -23.90% (YTD), சர்வதேச நிதிகள் (international funds) -14.55% மற்றும் பார்மா நிதிகள் (pharma funds) -10.87% வரை இழந்துள்ளன. IT துறை பிரிவில் உள்ள 10 திட்டங்களில், ஆறு திட்டங்கள் ஒரு வருடத்தில் 15%க்கு மேல் சரிவடைந்துள்ளன. மொத்தமுள்ள 13 ஃபார்மா ஃபண்டுகளில், கடந்த ஓராண்டில் 9 திட்டங்கள் 10%க்கு மேல் இறங்கியுள்ளன.

இது குறித்து மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசகர்கள் கூறுகையில், சில்லறை முதலீட்டாளர்கள் செக்டார் ஃபண்டுகளில் வருமானத்தைத் துரத்தக்கூடாது. இந்த திட்டங்கள் சுழற்சிகள் வழியாக செல்கின்றன மற்றும் மிகவும் ஆபத்தானவை என்று கூறுகின்றனர்.

நல்ல அனுபவமுள்ள மற்ரும் வளர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் குறிப்பிட்ட துறையைப் புரிந்துகொண்டு, நிறைய ஏற்ற இறக்கங்களைத் தாங்கக்கூடிய Sector and thematic funds முதலீடு செய்கின்றனர்.

எனவே, நீங்கள் ஒரு sector fund இல் முதலீடு செய்தாலும், thematic fund வகைத் திட்டங்கள் உங்கள் போர்ட்ஃபோலியோவின் ஒரு பகுதியாக வைத்து முதலீடு செய்ய வேண்டும் என்றும் நிதி ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்