ஆப்நகரம்

LIC வெளியிடும் புதிய சேமிப்புத் திட்டம்.. இதுல இவ்ளோ விஷயம் இருக்கா!!

எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் வருகின்றன் அக்டோபர் 6 அன்று LIC Multicap மியூச்சுவல் ஃபண்டை அறிமுகப்படுத்தவுள்ளது.

Samayam Tamil 3 Oct 2022, 3:09 pm
எல்ஐசி மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் அக்டோபர் 6 ஆம் தேதி 'எல்ஐசிஎம்எஃப் மல்டிகேப் ஃபண்ட்' தொடங்கும் என்று அறிவித்துள்ளது. புதிய ஃபண்ட் ஆஃபர் (NFO) அக்டோபர் 20, 2022 அன்று மூடப்படும். அதனையடுத்து, நவம்பர் 2, 2022 அன்று நடப்புச் சந்தாவுக்கு இந்தத் திட்டம் மீண்டும் திறக்கப்படும் என்று ஃபண்ட் ஹவுஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Samayam Tamil LIC MF.


எல்ஐசிஎம்எஃப் மல்டிகேப் ஃபண்ட் என்பது ஒரு திறந்தநிலை ஈக்விட்டி முதலீட்டுத் திட்டமாகும். மேலும் இதன் வருமானம் அனைத்து சந்தை மூலதனப் பிரிவுகளிலும் முதலீடு செய்யப்படும்.

ஃபண்ட் ஹவுஸ் அறிக்கைகளின்படி, LICMF மல்டிகேப் ஃபண்ட் தலா 25 சதவிகிதம் பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவிலான பங்குகளில் முதலீடு செய்யும், மீதமுள்ள 25 சதவிகிதம் நிதி மேலாளரின் விருப்பப்படி சந்தை மூலதனத்தில் முழுவதும் முதலீடு செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

LIC இன் Multicap Fund என்பது Large, Mid மற்றும் Small-cap மூன்று ஃபண்டுகளிலும் கவனத்தை செலுத்தி, லாபத்தை அதிகரிக்க முதலீட்டாளர்களுக்கு உதவும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சந்தாத் தொகை (நேரடித் திட்டம் மற்றும் வழக்கமான திட்டம்) ரூ. 5,000 ஆகும். முதலீட்டாளர்கள் கூடுதலாக ரூ. 500 வரையும் முதலீடு செய்யலாம்.

NFO காலத்தில் எல்ஐசி மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய திட்டங்களிலிருந்து (லாக்-இன் காலம் முடிந்திருந்தால்) முதலீட்டாளர்கள் திட்டத்திற்கு மாற விரும்பினால், குறைந்தபட்சத் தொகை ரூ. 5,000 செலுத்த வேண்டும்.

எல்.ஐ.சி மியூச்சுவல் ஃபண்டின் தற்போதைய திட்டங்களில் இருந்து "அனைத்து யூனிட்களையும்" இந்த திட்டத்திற்கு மாற்ற முதலீட்டாளர்கள் தேர்வு செய்தால், குறைந்தபட்ச தொகை தேவை இல்லை.

இந்த வசதியானது NFO இன் கடைசி நாள் வரை பிற்பகல் 3.00 மணி வரை ஸ்விட்ச் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறப்படுகிறது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்