ஆப்நகரம்

வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!! மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான முதலீட்டு வரம்பு உயர்வு!!

வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் பத்திரங்களின் மீதான முதலீட்டு வரம்பை உயர்த்துவது குறித்து செபி வாரியம் மற்றும் ரிசர்வ் வங்கி விவாதித்து வருகின்றன.

Samayam Tamil 17 Feb 2022, 1:31 pm
இந்திய செபி வாரியம் (The Securities and Exchange Board of India) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியும் இந்திய மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வெளிநாட்டு முதலீட்டு வரம்பை 25% வரை உயர்த்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதித்து வருகின்றன.
Samayam Tamil MF


நடப்பு நிதியாண்டில் மட்டும் வெளிநாட்டு முதலீடுகளின் வரம்பு 7 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக செபி வாரியம், இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேசன் ஆஃப் இந்தியாவும் அறிந்துள்ளதாகவும் அதனால் வெளிநாட்டு மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரம்பை உயர்த்துவது குறித்து விவாதித்து வருகின்றனர்.

இந்திய முதலீட்டாளர்கள் கூகிளின் ஆல்பாபெட், ஸ்டார்பக்ஸ், அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களில் பங்குகளை வாங்கி, மற்ற பெரிய உலகளாவிய நிதிகளில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் உலகளாவிய முதலீடுகளுக்கான இந்திய முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதைக் காட்டுகிது.

இதனைக் கண்காணித்த இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கம் (AMFI) மியூச்சுவல் ஃபண்டுகளுக்கான வரம்பை உயர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளது. AMFI ஏற்கனவே மூலதனச் சந்தைக் கட்டுப்பாட்டாளரான செபியுடன் இது குறித்து பேசியுள்ளது. அதனால் முதலீட்டு வரம்பை உயர்ந்துவது குறித்து ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செபி வாரியம் விவாதித்து வருகிறது.

நடப்பு நிதியாண்டின் வெளிநாட்டு முதலீடுகளின் சொத்து மதிப்பு ரூ. 46,390 கோடியாக (6.2 பில்லியன் டாலர்) ஆக உள்ளது என அறிக்கைகள் கூறுகின்றன.

அந்நியச் செலவாணிகள் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகள் குறித்தும் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டப் பிறகே, செபி அதனை செயல்படுத்தும். விரைவில் இது குறித்த முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்