ஆப்நகரம்

ரூ.1700 கோடி லாபம்.. சக்கை போடு போடும் மியூச்சுவல் ஃபண்ட்!

2022 ஆம் ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் முதலீட்டாளர்கள் வழக்கமான கோல்ட் ஈடிஎஃப் ஃபண்ட் திட்டங்களிலிருந்து தங்கள் முதலீடுகளை மாற்றியுள்ளனர்.

Samayam Tamil 26 Mar 2022, 10:27 am
மார்ச் 21, 2022 அன்று சர்வதேச தங்கத்தின் விலையானது ஒரு ஹவுன்சுக்கு 6.6% உயர்ந்து 1,921 டாலராக உயர்ந்துள்ளது. இந்திய மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேஷன் (AMFI) தரவுகளின்படி 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இரண்டே மாதங்களில் வழக்கமான மியூச்சுவல் ஃபண்ட் கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் இருந்து ரூ.700 கோடி மதிப்புள்ள திட்டங்களை சவரின் கோல்ட் பாண்ட் திட்டங்களுக்கு மாற்றியுள்ளனர் என்று கூறியுள்ளது.
Samayam Tamil gold


அதுமட்டுமின்றி கடந்த 5 மாதங்களில் கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளில் முதலீடுகள் மூலம் ரூ.1769 கோடி வருமானத்தை அத்திட்டங்கள் தொடர்ச்சியாக ஈட்டி வருகின்றன எனவும் மியூச்சுவல் ஃபண்ட் அசோசியேஷன் அறிக்கைகள் கூறியதாக எக்கனாமிக்ஸ் டைம்ஸ் பத்திரிக்கையிடம் தகவல் வெளியிட்டுள்ளது.

பல முதலீட்டாளர்கள் கோல்ட் ஈடிஎஃப் ஃபண்டுகளின் (ETF) தங்கப் பத்திரங்கள், வெள்ளி ETFகள் மற்றும் ஈக்விட்டி திட்டங்களுக்கு மாறியுள்ளனர் என்று எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் இந்நேரத்தில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.

1 ரூபாய்க்கு தங்கம் வாங்கலாம்.. அட்டகாசமான வாய்ப்பு!
இதற்கு காரணமாக ரஷ்யா-உக்ரைன் மோதல், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரிப்பு போன்ற பல காரணங்களை விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர். சில கோல்ட் ஈடிஎஃப் முதலீட்டாளர்கள் வழக்கமான கோல்ட் பாண்டுகள் அதாவது தங்கப் பத்திரங்களுக்கு தங்களின் முதலீட்டு திட்டங்களை மாற்றி வருகின்றனர் என்று மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான ஜிஇபிஎல் கேபிட்டலின் (GEPL Capital) தலைவர் ரூபேஷ் பன்சாலி (Rupesh Bhansali) கூறியுள்ளார்.

Disclaimer:
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்