ஆப்நகரம்

மாதம் 100 ரூபாய்.. 5 ஆண்டில் பல லட்சம் பணம் கிடைக்கும்.. முதலீடு செய்ய நீங்க ரெடியா?

100 ரூபாய்க்கு மாதம் சேமிக்க நினைக்கும் அனைவருக்கும் ஏற்ற SIP திட்டம்.

Samayam Tamil 15 May 2023, 4:36 pm
பங்குச் சந்தையில் சமீபத்திய ஏற்பட்ட ஏற்ற இறக்கத்தின் காரணமாக பெரும்பாலான முதலீட்டாளர்கள் டெட் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களைக் கைவிட்டுள்ளனர். இருப்பினும்இந்த மிட்கேப் வகையானது கடந்த ஒரு வருடத்தில் இன்னும் நேர்மறையான இடத்தில் உள்ளது.
Samayam Tamil sundaram midcap fund


கடந்த ஒரு வருடத்தில் இந்த வகை ஃபண்டுகள் 10% லாபத்தை அளித்துள்ளது. மிட்கேப் திட்டங்கள் கடுமையான சந்தை நிலைகளில் வர்த்தகம் செய்யக்கூடும் என்பதை இந்த தரவானது தெளிவாகக் காட்டுகிறது.

அதிலும் குறிப்பாக சுந்தரம் மிட்கேப் திட்டம் கடந்த 3 ஆண்டில் நினைத்ததைவிட அதிக லாபத்தை அளித்துள்ளது. அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

இந்த திட்டத்திற்கான குறைந்தபட்ச SIP முதலீட்டுத் தொகை ரூ.100 ஆகும். அதே Lumpsum எனில் ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 முதலீடு செய்யத் தொடங்கலாம்.

இந்த ஃபண்டில் முதலீடு செய்து 365 நாட்கள் அல்லது ஒரு வருடத்திற்குள் வெளியேறினால் exit load அதாவது வெளியேற்றக் கட்டணமாக உங்கள் முதலீட்டில் இருந்து 1 சதவீதமும், மொத்த யூனிட்டிலிருந்து 25% பிடித்தம் செய்யப்படும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்