ஆப்நகரம்

அட்டகாசமான வருமானம் கொடுத்த SBI மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!

கடந்த 5 ஆண்டுகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக லாபம் தந்த SBI mutual funds பற்றி பார்க்கலாம்.

Samayam Tamil 21 Mar 2023, 3:30 pm
நீண்டகால அடிப்படையில் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முறையில் முதலீடு செய்வது நல்ல லாபம் தரும். சரியாக தேர்வு செய்து முதலீடு செய்தால் வலுவான வருமானம் கிடைக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில் சில எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் அதிக வருமானம் கொடுத்துள்ளன.
Samayam Tamil SBI mutual funds


பங்குச் சந்தையில் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் ஒருபுறம் இருக்க, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எப்போது வேண்டுமானாலும் முதலீடு செய்துகொள்ள முடியும். குறிப்பாக, மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் SIP முறையில் முதலீடு செய்வது சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்..

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்டுகள்!

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களான SBI Technology Opportunities Fund, SBI Focused Equity, SBI Magnum Equity ESG Fund ஆகியவை கடந்த 5 ஆண்டுகளில் மிரட்டலான வருமானம் கொடுத்துள்ளன.

ஒன் டைம் இன்வெஸ்ட்டார்ச் மற்றும் SIP முதலீட்டாளர்கள் என இருதரப்பினருக்குமே இம்மூன்று மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களும் கடந்த ஐந்து ஆண்டுகளில் அட்டகாசமான வருமானம் கொடுத்துள்ளன.

SBI Technology Opportunities Fund

ஒருமுறை முதலீட்டாளர்கள் இத்திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கு முன் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் தற்போது 3.26 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். SIP முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 14.51 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

SBI Focused Equity

முதலீட்டாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு முன் இத்திட்டத்தில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 2.19 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும். SIP முதலீட்டாளர்கள் 5 ஆண்டுகளுக்கு முன் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்திருந்தால் இப்போது 10.23 லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்