ஆப்நகரம்

அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்ட்.. இந்த ஆண்டின் சிறந்த ஃபண்டுகள்!

மியூச்சுவல் ஃபண்டில் இந்த ஆண்டு முதலீடு செய்யச் சிறந்த Arbitrage funds பற்றி இதில் காணலாம்.

Samayam Tamil 6 Aug 2022, 3:01 pm
சில காலங்களாகவே ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளுக்கான வரவேற்பு குறைந்துள்ளது உண்மைதான். ஆனால் சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களின் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் கடந்த ஓராண்டாக நல்ல லாபத்தை அளித்து வந்துள்ளன. ஏனெனில் ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்றவாறு செயல்படும் என்பதால் பெரும் இழப்புகள் தவிர்க்கப்படும்.
Samayam Tamil MF


ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் ரொக்கம் மற்றும் ஃபியூச்சர் சந்தைக்கு இடையேயான விலை வேறுபாட்டைப் பார்க்கின்றன. இந்தத் திட்டங்களுக்கு வரிச் சலுகைகளும் உண்டு. ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகள் ஈக்விட்டி திட்டங்களைப் போலவே வரி விதிக்கப்படுகின்றன.

ஒரு வருடத்திற்கு மேல் முதலீடுகளை வைத்திருந்தால் அவர்கள் 10% (capital gains tax) பெறத் தகுதி பெறுவார்கள். ஒரு வருடத்திற்கும் குறைவாக முதலீடு செய்தால், 15% குறுகிய கால மூலதனத்தில் capital gains tax விதிக்கப்படும்.

வட்டி எல்லாம் கூடிப் போச்சு.. இனி எந்த திட்டத்தில் முதலீடு செய்தால் நல்லது?
இந்த ஆண்டில் முதலீடு செய்யச் சிறந்த ஆர்பிட்ரேஜ் ஃபண்டுகளின் (Arbitrage funds) பட்டியல்:

1. கோடக் ஈக்விட்டி ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Kotak Equity Arbitrage Fund)

2. நிப்பான் இந்தியா ஆர்பிட்ரேஜ் ஃபண்ட் (Nippon India Arbitrage Fund)

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்