ஆப்நகரம்

அட 10 ரூபாயில சேமிக்க முடியுமா.. அதென்னப்பா அப்படியொரு திட்டம்.. அதில் என்ன ஸ்பெஷல்!

மியூச்சுவல் ஃபண்டில் 10 ரூபாய் முதலீட்டில் அதிக லாபம் தரும் திட்டம்.

Samayam Tamil 27 May 2023, 5:20 pm
இப்பொழுது இருக்கும் கால கட்டத்தில் தினமும் 10 ரூபாயைச் சேமிப்பதே பெரும் சவாலாக உள்ளது. கையில் பணம் இருந்தாலும் சேமிக்கும் எண்ணம் வருவது இல்லை. ஆனால் சிலரோ அவரிடம் உள்ள 10 ரூபாயைக் கூட வீணாக்காமல் சேமிக்க நினைக்கின்றனர்.
Samayam Tamil SIP under Rs.10


அவர்களுக்கெனவே சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் பல திட்டங்களை அறிமுகப்படுத்திய வண்ணம் உள்ளன. அதிலும் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்ற மியூச்சுவல் ஃபண்டும் இதுதான்.

அதிலும் குறிப்பாக ஈடிஎஃப் ஃபண்டுகள் ஈக்விட்டி பங்குகளில் 99% தொகையைப் பங்குச் சந்தையில் முதல் 100 இடங்களைப் பிடித்த நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்வதால் இந்த ஃபண்டில் கடந்த ஒரு வருடத்தில் 10% குறையாமல் சராசரி ஆண்டு லாபத்தை அதன் முதலீட்டாளர்களுக்கு அளித்து வருகின்றன.

CPSE Exchange Traded Fund-Growth

நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்டால் மார்ச் 2014 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இந்த ஃபண்ட் வெளியான ஆண்டு முதலே 7% லாபத்தை அளித்து வந்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் இந்த ஃபண்டானது 10% லாபத்தை அளித்துள்ளது.

மேலும் இந்த ஃபணி தொகையில் 99.96% ஈக்விட்டி பங்குகளில் மட்டுமே முதலீடு செய்யப்படுவதால் இந்த ஃபண்டில் உறுதியான லாபமாக 10% கிடைக்கும்.

இந்த ஃபண்டிற்கான குறைந்தபட்ச சிப் முதலீட்டுத் தொகையானது ரூ.10 முதல் ஆரம்பிக்கிறது. குறைந்தபட்சமாக சிப் முறையில் மாதந்தோறும் ரூ.500 முதலீட்டில் 3 முதல் 5 அண்டுகளை லாக்-இன் காலம் வைத்துச் சேமித்தால் லட்சங்களில் லாபம் பார்க்கலாம்.

ஆனால் முதலீட்டிற்கேற்ற லாபமே கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த ஃபண்டில் லாக்-இன் காலம் இல்லை. வெளியேற்றக் கட்டணமும் இல்லை.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்