ஆப்நகரம்

UTI NFO: யூடிஐ வெளியிடும் புதிய ஃபண்ட்.. இதில் எவ்வள்வு தொகை முதலீடு செய்யலாம்?

யூசிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் UTI S&P BSE ஹவுசிங் இன்டெக்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது.

Samayam Tamil 23 May 2023, 5:25 pm
UTI மியூச்சுவல் ஃபண்ட் UTI S&P BSE ஹவுசிங் இன்டெக்ஸ் ஃபண்டை அறிமுகப்படுத்தியுள்ளது, இது S&P BSE ஹவுசிங் மொத்த வருவாய் குறியீட்டை (TRI) பிரதிபலிக்கும்/கண்காணிக்கும் ஒரு திறந்தநிலை திட்டமாகும்.
Samayam Tamil UTI MF NFO


இத்திட்டம் சந்தாவிற்காக இன்று திறக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 5 அன்று முடிவடையும். திட்டத்தின் செயல்திறன் S&P BSE Housing TRIக்கு எதிராக தரப்படுத்தப்படும். இந்த திட்டத்தை ஷர்வன் குமார் கோயல் மற்றும் ஆயுஷ் ஜெயின் ஆகியோர் நிர்வகிப்பார்கள்.

சந்தவிற்கான குறைந்தபட்சத் தொகை ரூ. 5,000 ஆகும். மேலும் இதில் நீங்கள் தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர SIPக்கான குறைந்தபட்ச SIP தொகை ரூ. 500 வரை முதலீடு செய்யலால் அல்லது காலாண்டு SIPக்கான குறைந்தபட்ச SIP தொகை ரூ. 1,500 அல்லது அதற்குமேலும் முதலீடு செய்யலாம்.

இந்தத் திட்டம் 95-100% S&P BSE வீட்டுக் குறியீட்டின் கீழ் உள்ள பத்திரங்களில் முதலீடு செய்யும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டமாகும். இத்திட்டம் நீண்டகால முதலீட்டாளர்களுக்கு ஏற்றது.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்