ஆப்நகரம்

வட்டி எல்லாம் கூடிப் போச்சு.. இனி இந்த முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!!

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50% உயர்த்தியதைத் தொடர்ந்து மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்கள் முதலீடுகளை எப்படி பாதுகாக்கலாம்.

Samayam Tamil 30 Sep 2022, 3:00 pm
கடந்த இரு தினங்களாக ரிசர்வ் வங்கியின் இந்தியாவின் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த பணக் கொள்கை கூட்டம் நடத்தி வந்தது. இந்நிலையில், கொள்கை கூட்டத்தின் முடிவுகளை இன்று காலை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகந்தா தாஸ் வெளியிட்டார்.
Samayam Tamil repo rate hike vs debt fund


அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50% உயர்த்தப்பட்டு 5.9% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதேபோல SDF விகிதம் 5.65% ஆகவும், MSF விகிதம் 6.15% ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி கவனர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் வட்டி விகித உயர்வுகளை அடுத்து மியூச்சுவல் ஃபண்டின் DEBT பண்ட் முதலீட்டாளர்கள் தங்கள் நிதிகளை எப்படி அதிக இழப்புகளிலிருந்து பாதுகாக்கலாம் என்பது குறித்து இங்குக் காணலாம்.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1b7f9gg&height=360&width=640

மேலும் அதிகரித்து வரும் வட்டி விகிதம் பொருளாதாரம் மற்றும் முதலீடுகளுக்கு மோசமான செய்தியாக இருக்கும். ஏனெனில் அதிக வட்டி விகிதங்கள் காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவது கடினம். குறைந்த தேவை காரணமாக நிறுவனங்கள் கடன் வாங்குவதை ஒத்திவைக்கலாம்.

மியூச்சுவல் ஃபண்டில் அதிலும் டெட் மியூச்சுவல் ஃபண்டில் (Debt Fund) குறிப்பாக நீண்ட கால டெட் ஃபண்ட் (Debt Fund) முதலீடுகளுக்கு வட்டி விகித உயர்வு எப்போதும் மோசமான செய்தியாகும்.

ஏனெனில் அதிகரித்து வரும் வட்டி விகிதங்களால் பத்திரங்களின் விலையில் வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இது கடன் திட்டங்களின் என்ஏவிகளைக் குறைக்கிறது. எனவே, உங்கள் டெட் மியூச்சுவல் ஃபண்டுகளிலிருந்து ஏற்ற இறக்கமான மற்றும் குறைந்த வருமானத்தைத்தான் எதிர்பார்க்க முடியும். இருப்பினும், உங்கள் மிகக் குறுகிய கால ஃபண்டுகளான liquid funds, money market funds களுக்கு சிறந்த வருமானத்தை வழங்கக்கூடும்.

மேலும் உயரும் வட்டி விகிதங்களால் ஈக்விட்டி ஃபண்ட் முதலீடுகளுக்கும் பாதிப்பு இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு கூறியது போல், நிறுவனங்கள் அதிக கடன் வாங்கும் செலவுகள் மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவையைக் குறைக்கலாம். இது அவர்களின் விரிவாக்கத் திட்டங்களை நிறுத்த அல்லது மெதுவாகச் செல்லும்.

இது பங்குச் சந்தையின் உணர்வைப் பாதிக்கும். எனவே, உங்கள் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து மிதமான வருமானத்தை எதிர்பார்க்கலாம். அதிக ஆபத்துள்ள பந்தயங்களில் நீங்கள் முதலீடு செய்திருந்தால், தற்காலிக இழப்புகளையும் நீங்கள் காணலாம். சுருக்கமாக, இது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமாகும்.

Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆலோசகரிடம் கேட்டறிந்து சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்