ஆப்நகரம்

Zerodha பயனர்கள் இனி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய முடியாது.. ஏன் தெரியுமா?

ஜூலை 1 முதல் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்காக வர்த்தகக் கணக்கில் பணத்தை மாற்றிப் பயன்படுத்தும் அனுமதி நிறுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Jul 2022, 2:10 pm
ஜூலை 1 முதல் பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கு வர்த்தகக் கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்தும் அனுமதியை நிறுத்தியுள்ளது. எனவே ஜீரோதா காயின் (Zerodha's Coin) செயலி மூலம் மியூச்சுவல் ஃபண்ட் பரிவர்த்தனைகளில் முதலீடு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil zerodha


BSE ஆல் பகிரப்பட்ட கட்டண இணைப்பு மூலம் உங்கள் SIP-காக நீங்கள் பணம் செலுத்தியிருந்தால், நீங்கள் மீண்டும் பணம் செலுத்த வேண்டியதில்லை எனவும், மேலும் உங்கள் ஆர்டர்கள் இன்று முதல் செயல்படுத்தப்படும் எனவும் ஜீரோதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், எதிர்கால பரிவர்த்தனைகளுக்குப் பயனாளர்கள் காயின் ஆப்பை பயன்படுத்தி அதன் மூலம் பணம் செலுத்துங்கள் என்றும், BSE அனுப்பும் மின்னஞ்சல்களைப் புறக்கணியுங்கள் என்றும் இன்று திட்டமிடப்பட்ட SIP முதலீடுகளுக்குப் பொருந்தாது எனவும் ஜீரோதா கூறியுள்ளது.

பட்டையைக் கிளப்பும் டோஜ்காயின்.. படுத்தே விட்டது பிட்காயின்!!
BSE Star MF மற்றும் Razorpay ஆகியவற்றில் உள்ள சிக்கல் காரணமாக வாங்குவதற்கான ஆர்டர்கள் இப்போது தடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும், மீட்பு ஆர்டர்கள் அனுமதிக்கப்படுகின்றன என்று இரு தரகு நிறுவனங்களின் தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

"ஜூலை 1, 2022 முதல் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளுக்கு Zerodha கணக்கில் உள்ள நிதியைப் பயன்படுத்த முடியாது. மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவதற்கான நிதியை Zerodha உடன் இணைக்கப்பட்ட முதன்மை வங்கிக் கணக்கிலிருந்து ICCLக்கு மாற்ற வேண்டும்" என்றும் ஆன்லைன் தரகு நிறுவனம் FAQ இல் தெரிவித்துள்ளது.

ஆட்டோ டெபிட் ஆன பணமும் முதலீட்டாளரின் முதன்மை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என ஜீரோதா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்