ஆப்நகரம்

பெட்ரோல் விலை: அப்பாடா, ரிலாக்ஸான வாகன ஓட்டிகள்!

நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான ஏற்ற, இறக்கங்களை கண்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி காணலாம்.

Samayam Tamil 13 Sep 2020, 7:20 am
நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறியுள்ளன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil petrol rate


இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

ஈஎம்ஐ சலுகை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமா? - ஆனந்த் ஸ்ரீனிவாசன்

கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.85ஆக விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவால் தொழில் துறை உற்பத்தி பாதிப்பு!

இதேபோல் டீசல் விலையிலும் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.26 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. விலை உயர்வு ஏற்படாமல் பழைய விலையே தொடர்வதால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்