ஆப்நகரம்

பெட்ரோல் விலை: உச்சத்தை தொடும் விலை, அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

சென்னையில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 27 Jan 2021, 7:36 am
நமது வாழ்வின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்து வந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil petrol price


இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இதில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.
சசிகலா இன்று விடுதலை: ஆர்ப்பரிக்கும் ஆதரவாளர்கள்!
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 22 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.88.82ஆக விற்பனை செய்யப்படுகிறது.
Tax Saving FD என்றால் என்ன? வரி சலுகையுடன் லாபம் தரும் அதிசய திட்டம்!
இதேபோல் டீசல் விலையும் நேற்றைய விலையிலிருந்து 24 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.81.71 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்