ஆப்நகரம்

Petrol Price: எல்லா நகரிலும் மீண்டும் உயர்வை கண்ட பெட்ரோல் டீசல் விலை

இன்றும் பெட்ரோல், டீசல் விலை எல்லா முக்கிய நகரங்களில் உயர்வை கண்டுள்ளது.

Samayam Tamil 16 Oct 2018, 8:00 am
சென்னை: இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை சந்தித்துள்ளது.
Samayam Tamil petrol


பெட்ரோல், டீசல் விலையை அதை விநியோகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது முதல் தினம் தினம் எரிபொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன.

தினமும் உயர்ந்து வரும் இந்த விலை உயர்வால் மக்களின் பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடிப்படை பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றன. பெட்ரோல், டீசல் விலையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதைத் தொடர்ந்து மத்திய அரசு எரிபொருள் மீதான கலால் வரி குறைத்தது. அதன் மூலம் பெட்ரோ, டீசல் விலையில் ரூ. 2.50 குறைந்தது. ஆனால் மீண்டும் எரிபொருட்களின் விலை அதிகரித்து மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடக் கூடிய சூழல் உருவாகியுள்ளது.

பெரிய நகரங்களில் பெட்ரோல் டீசல் விலை நிலவரம்:
சென்னை:
பெட்ரோல் : ₹ 86.10 (உயர்வு 0.11பைசா) நேற்றைய விலை: ₹ 88.18
டீசல் :₹ 80.04 (உயர்வு 0.24பைசா) நேற்றைய விலை: ₹ 79.80

டெல்லி
பெட்ரோல் : ₹ 82.72 (உயர்வு 0 பைசா) நேற்றைய விலை: ₹ 88.18
டீசல் :₹ 75.46 (உயர்வு 0.08பைசா) நேற்றைய விலை: ₹ 75.38

மும்பை
பெட்ரோல் : ₹ 88.29 (உயர்வு 0.11பைசா) நேற்றைய விலை: ₹ 88.18
டீசல் :₹ 79.35 (உயர்வு 0.24பைசா) நேற்றைய விலை: ₹ 79.11

கொல்கத்தா
பெட்ரோல் : ₹ 84.54 (உயர்வு 0 பைசா) நேற்றைய விலை: ₹ 84.54
டீசல் :₹ 77.31 (உயர்வு 0.08பைசா) நேற்றைய விலை: ₹ 77.23

அடுத்த செய்தி

டிரெண்டிங்