ஆப்நகரம்

பெட்ரோல் விலை: சண்டே செம ஹேப்பி நியூஸ் - ரெடியாருங்க வாகன ஓட்டிகளே!

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 19 Jul 2020, 7:19 am
நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil Petrol Price in Chennai


இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவில் உளவுபார்க்கும் சீன நிறுவனங்கள் இவைதான்!

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது.

விப்ரோ செய்த நல்ல காரியம்... விமானங்கள் மூலம் 500 பேர் மீட்பு!

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.50 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை நிர்ணயம் வாகன ஓட்டிகளிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்