ஆப்நகரம்

பெட்ரோல் விலை: 18வது நாளாக நிகழும் ஆச்சரியம்!

தலைநகரில் பெட்ரோல், டீசலின் இன்றைய விலை நிலவரம் குறித்து இங்கே காணலாம்.

Samayam Tamil 19 Oct 2020, 7:36 am
நம்முடைய அன்றாட தேவைகளில் ஒன்றாக எரிபொருட்கள் மாறிவிட்டன. அவற்றில் வாகனப் பயன்பாட்டிற்கான பெட்ரோல், டீசல் மிகவும் முக்கியமானது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil Petrol Price


இந்த முறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது வந்தது. இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. அதன்பிறகு இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் வசமானது.

பின்னர் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

கடந்த மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொடக்கத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

2500 ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்: அம்பானியின் அடுத்த சுனாமி!

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றம் ஏதுமின்றி லிட்டருக்கு ரூ.84.14ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.75.95 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. தொடர்ந்து 18வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்