ஆப்நகரம்

பெட்ரோல் விலை: வண்டிய ஸ்டார்ட் பண்றதுக்கு முன்னால விலைய பாருங்க!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம். மற்ற நகரங்களிலும் விலை என்ன என்று பார்க்கலாம் வாருங்கள்...

Samayam Tamil 1 Aug 2020, 5:38 pm
நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது.
Samayam Tamil petrol price


இந்த நடைமுறையில் தினமும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்ந்துகொண்டே சென்றது. கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட விலை உயர்வு காணப்பட்டது. எனினும் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட பின்னர் இவற்றின் விலை கூடவும் இல்லாமல் குறையவும் இல்லாமல் இருந்து வருகிறது. சில நாட்களில் டீசல் விலை மற்றும் உயர்ந்தது. இன்றைய நிலவரம் என்ன என்று பார்க்கலாம்.

சென்னையில் மாதத்தின் முதல் நாளான இன்று (ஆகஸ்ட் 1) பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. அதேபோல, டீசல் விலையிலும் மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மற்ற நகரங்களில் பெட்ரோல் - டீசல் விலை!

டெல்லியில் பெட்ரோல் விலை - ரூ.80.43
டெல்லியில் டீசல் விலை - ரூ.81.94

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை - ரூ.82.10
கொல்கத்தாவில் டீசல் விலை - ரூ.77.04

மும்பையில் பெட்ரோல் விலை - ரூ.87.19
மும்பையில் டீசல் விலை - ரூ.80.11

அடுத்த செய்தி

டிரெண்டிங்