ஆப்நகரம்

Petrol Price: இன்றும் (23-02-2019) ஏறுமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை..!!

இன்று பெட்ரோல், டீசல் விலை அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி நேற்றைய நிலவரத்திலிருந்து பெட்ரோல் விலை 0.06 காசுகள் அதிகரித்து ரூ. 74.08-ஆகவும், டீசல் விலை 0.07 காசுகள் அதிகரித்து ரூ. 70.32- ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Feb 2019, 6:07 am
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் நிலவி வந்தது. அதே மாற்றம் இன்றும் தொடர்கிறது. இந்நிலையில், இன்று பெட்ரோல் விலை ரூ. 74.08-ஆகவும், டீசல் விலை ரூ. 70.32-ஆகவும் உள்ளன.
Samayam Tamil petrol-diesel-620x400


கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை சிறிது சிறிதாக மாறுபட்டு வரும் நிலையில், இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் குறித்த விபரங்கள் வெளிவந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன. சுமார் 15 ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட இந்த நடைமுறை கடந்த 2017 ஜூன் மாதம் கைவிடப்பட்டது.

இதையடுத்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. இந்த நடைமுறையில் எரிபொருட்களின் விலை தொடர்ச்சியாக கணிசமாக உயரிந்து வருவதால், பொதுமக்கள் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், நேற்றைய நிலவரத்திலிருந்து இன்றைய பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி இன்றைய பெட்ரோலின் விலை ரூ. 74.08-ஆகவும், டீசல் விலை ரூ. 70.32-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை நிலைவரம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்