ஆப்நகரம்

பெட்ரோல் விலை: எகிறி அடிக்கும் விலை - வாகன ஓட்டிகள் சோகம்!

நாளுக்கு நாள் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

Samayam Tamil 26 Jun 2020, 7:12 am
நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
Samayam Tamil பெட்ரோல் டீசல் விலை


இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

வணிகர்களுக்கு சூப்பர் நியூஸ்... இனி கூகுளிடமே கடன் பெறலாம்!

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 19 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.83.37ஆக விற்கப்படுகிறது.

கால்நடை வளர்ப்போருக்கு நற்செய்தி!

இதேபோல் டீசல் விலை 15 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.77.44 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பெரும் கவலைக்கு ஆளாகியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்