ஆப்நகரம்

போனஸ் பங்கு.. டிவிடெண்ட்.. உங்ககிட்ட இந்த பங்குகள் இருக்கா?

டிவிடெண்ட் வழங்கும் அக்சீல்யா நிறுவனம் - போனஸ் பங்கு வழங்கும் ஏசியன் ஹோட்டல்ஸ்.

Samayam Tamil 5 Oct 2022, 4:30 pm
இன்று தசரா பண்டிகைக்காக பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை பங்கு வர்த்தகத்தின்போது இரண்டு பங்குகள் மீது அதிக கவனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹோட்டல் நிறுவனமான ஏசியன் ஹோட்டல்ஸ் (Asian Hotels), ஐடி நிறுவனமான அக்சீல்யா (Accelya Solutions) ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் பங்குதாரர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளன.
Samayam Tamil stocks


அக்சீல்யா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. அதேபோல ஏசியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. இதனால் நாளை இவ்விரு பங்குகளும் ட்ரெண்டிங்கில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று பங்கு வர்த்தகத்தில் அக்சீல்யா பங்கு விலை 1142.45 ரூபாய் என முடிவடைந்துள்ளது. அக்சீல்யா நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு 45 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி அக்டோபர் 10. வரும் அக்டோபர் 14ஆம் தேதி டிவெண்ட் செலுத்தப்படும் எனவும் அக்சீல்யா நிறுவனம் தெரிவித்துள்ளது.

பண்டிகை, திருமண சீசனில் இப்படியா.. எகிறப்போகும் தங்கம் விலை!
அடுத்ததாக, ஏசியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தனது பங்குதாரர்களுக்கு 1:2 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, பங்குதாரர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு இரண்டு பங்குகளுக்கும் ஒரு போனஸ் பங்கு வழங்கப்படும் என ஏசியன் ஹோட்டல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான ரெக்கார்ட் தேதி அக்டோபர் 7.

நேற்று பங்கு வர்த்தகம் முடிவில் ஏசியன் ஹோட்டல்ஸ் பங்கு விலை 91.25 ரூபாயாக முடிவடைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்