ஆப்நகரம்

Adani stocks: ரத்த வெள்ளத்தில் அதானி பங்குகள்.. ஹிண்டென்பர்க் ரிப்போர்ட் எதிரொலி!

ஹிண்டென்பர்க் அறிக்கை எதிரொலியாக இன்று அதானி பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 27 Jan 2023, 12:52 pm
இன்று (ஜனவரி 27) பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமத்தின் ஏழு நிறுவனங்களின் பங்கு விலை மிக மோசமாக சரிந்துள்ளன. ஏற்கெனவே ஜனவரி 25ஆம் தேதி அதானி பங்குகள் கடுமையாக சரிந்துவிட்ட நிலையில், இன்று மீண்டும் அதானி பங்குகள் ரத்த வெள்ளத்தில் மிதக்கின்றன.
Samayam Tamil adani
adani


இன்று மட்டும் அதானி பங்குகள் கிட்டத்தட்ட 20% வரை சரிந்துவிட்டன. அதானி குழுமம் சார்ந்த அனைத்து பங்குகளுமே இன்று மிக மோசமாக சரிந்துள்ளன. அதானி எண்டர்பிரைசஸ் பங்கு 9% மேல் சரிந்துள்ளது. அதானி ட்ரான்ஸ்மிஷன் பங்கு 19% மேல் சரிந்துள்ளது.

அதானி டோட்டல் கேஸ் பங்கு 20% சரிந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்கு 19% மேல் சரிந்துள்ளது. அதானி போர்ட்ஸ் பங்கு 15% சரிந்துள்ளது. அதானி பவர் பங்கு 5% சரிந்துள்ளது. அதானி வில்மர் பங்கு 5% சரிந்துள்ளது. ஏசிசி பங்கு 11% சரிந்துள்ளது. அம்புஜா சிமெண்ட்ஸ் பங்கு 17% சரிந்துள்ளது. என்டிடிவி பங்கு 5% சரிந்துள்ளது.

Adani: அதானிக்கு ஹிண்டென்பர்க் சவால்.. முடிஞ்சா கோர்ட்டுக்கு போங்க!
இப்படி இன்று பங்கு வர்த்தகத்தில் அதானி குழுமம் சார்ந்த அனைத்து பங்குகளும் ரத்தம் கசிந்து வருகின்றன. அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் (Hindenburg Research) நிறுவனம் ஜனவரி 25ஆம் தேதி அதானி குழுமம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், அதானி குழுமம் கணக்கு மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், அதானி பங்குகள் கையாளப்பட்டு ஏற்றப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து அதானி பங்குகள் மிக மோசமாக சரிந்துள்ளன.

மேலும், அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு சரிந்து உலக பணக்காரர்கள் பட்டியலில் அவர் கீழே சறுக்கியுள்ளார். ஹிண்டென்பர்க் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அதானி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. எனினும், முடிந்தால் நீதிமன்றத்துக்கு செல்லும்படி அதானிக்கு ஹிண்டென்பர்க் சவால் விடுத்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் அதானியிடம் கேட்டு வாங்க வேண்டிய ஆவணங்கள் நிறைய இருப்பதாகவும் ஹிண்டென்பர்க் தெரிவித்துள்ளது.

எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்