ஆப்நகரம்

பிரபல சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றிய அதானி குழுமம்..

இந்தியாவின் பெரும் பணக்காரரான கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பிரபல சிமெண்ட் நிறுவனங்களை கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 16 May 2022, 1:09 pm
இந்தியாவின் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்களான ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகிய நிறுவனங்களை சுவிஸ் நாட்டின் ஹோல்சிம் நிறுவனத்திடம் இருந்து அதானி குழுமம் கைப்பற்றியுள்ளது. இந்த நிறுவனத்தைக் கைப்பற்ற ஜின்டால், அல்ட்ராடெக் போன்ற நாட்டின் முன்னணி நிறுவனங்கள் ஏற்கன்வே போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில், கௌதம் அதானி மிகப்பெரிய தொகையைக் கொடுத்துக் கைப்பற்றியுள்ளார்.
Samayam Tamil adani


கெளதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல பிரிவுகளில் தங்களது வர்த்தகத்தை கைவசம் வைத்துள்ள நிலையில், சமீபத்தில் புதிதாக, அதானி சிமெண்ட் நிறுவனத்தை உருவாக்கியது. தற்போது குழுமம் மிகப்பெரிய நிறுவனத்தை கைப்பற்றி அசத்தியுள்ளது.

அதானி குழுமம் ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனங்களை 10.5 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது. இந்த இரு சிமெண்ட் நிறுவனங்களும் வருடத்திற்கு 66 பில்லியன் டன் உற்பத்தி செய்கின்றன.

இந்த நிலையில், சுவிஸ் நாட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் ஹோல்சிம் நிறுவனம் ஏசிசி சிமெண்ட மற்றும் அம்புஜா சிமெண்ட் ஆகியவற்றை வெளியேற தயாராகியுள்ளது.

10.5 பில்லியன் டாலர் டீல் ஆனது, இந்திய இன்பரா, மெட்டிரீயல் பிரிவில் மிகப்பெரிய வர்த்தகமாக உள்ளது. இந்த இரு நிறுவனங்களை கைப்பற்றியதன் மூலம் இந்தியாவின் 2வது பெரிய சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக அதானி சிமெண்ட் மாறி உள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்