ஆப்நகரம்

Today Trendy stock: லாபத்தை அள்ளி வீசும்.. இந்த பங்கு மேல ஒரு கண்ணு வைங்க!

இன்று பங்குச் சந்தையில் ஏபிஎல் அப்பல்லோ ஜீம்ஸ் லிமிடெட் (APL Apollo zooms ltd) சேவை நிறுவனத்தின் பங்கானது ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.

Samayam Tamil 6 Oct 2022, 1:02 pm
இன்று பங்குச் சந்தை ஏற்றத்துடன் திறக்கப்பட்டுள்ளன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஏபிஎல் அப்பல்லோ ஜீம்ஸ் லிமிடெட் (APL Apollo zooms ltd) பங்கின் விலையானது பங்கு வர்த்தக அமர்வின் ஆரம்ப மணிநேரங்களில் 6% க்கு மேல் உயர்ந்ததால் இன்று ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.
Samayam Tamil stock


ஏபிஎல் அப்பல்லோ ஜீம்ஸ் லிமிடெட் பிராண்டட் ஸ்டீல் தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும். டெல்லி NCR ஐ தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனம் 1,500 வெவ்வேறு வகையான குழாய்கள் மற்றும் குழாய்களை உற்பத்தி செய்யும் பத்து உற்பத்தி வசதிகளை இயக்குகிறது.

அதுமட்டுமின்றி பங்குச் சந்தையில் அதன் போட்டியாளர் நிறுவனங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இப்பங்கானது அதன் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அளித்து இன்று பிரேக்-அவுட் ஸடாக்காகவும் ஜொலிக்கிறது.

Multibagger stocks: உங்ககிட்ட 99 ரூபாய் இருக்கா.. அப்போ உடனே இந்த பங்கை வாங்கிப் போடுங்க!
நிறுவனத்தின் நிதிச் செயல்திறனைக் கணக்கில் கொண்டால், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1FY22) பதிவுசெய்யப்பட்ட லாபத்திலிருந்து 35.68% உயர்ந்து அதன் நிகர வருமானமானது ரூ.2,534.28 கோடியாக உள்ளது. இதன் மூலதனத்தின் மீதான வருவாயின் அடிப்படையில் (RoCE), நிறுவனம் 17-20% வலுவான RoE உடன் அதன் போட்டியாளர் நிறுவனங்களை விட சிறப்பாக செயல்படுகிறது.

இன்று இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது உயர்ந்து ரூ.1097.40 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இதன் விலை இனி வரும் இப்பங்கின் விலை உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் வளர்ச்சியைக் கண்காணிக்க வர்த்தகர்கள் இந்தப் பங்கை தங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம் எனக் கூறியுள்ளனர்.

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified.

அடுத்த செய்தி

டிரெண்டிங்