ஆப்நகரம்

Nifty: கரடியின் பிடியில் பங்குச் சந்தை.. பெரும் சரிவிலிருந்து முக்கிய பங்குகள்!!

இன்று பங்குச் சந்தையில் நிஃப்டி 200 புள்ளிகளும், சென்செக்ஸ் 800 புள்ளிகள் சரிந்து இறங்குமுகத்துடன் ஆரம்பித்துள்ளது.

Samayam Tamil 26 Sep 2022, 11:36 am
முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்கு விற்பனையிலிருந்து இன்னும் மீளாததால் இந்திய பங்குச் சந்தையில் ஆரம்ப வர்த்தகத்தில் பிஎஸ்இ சென்செக்ஸ் 800 புள்ளிகளும், என்எஸ்இ நிஃப்டி 250 புள்ளிகளுக்கும் மேல் சரிந்துள்ளது.
Samayam Tamil share mkt crash


இன்று காலை 9:49 மணிக்கு பிஎஸ்இ சென்செக்ஸ் முந்தைய முடிவில் இருந்து 789.20 (1.36%) புள்ளிகள் சரிந்து 57,309.72 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 253.60 (1.46%) புள்ளிகள் குறைந்து 17,073.75 புள்ளிகளுடனும் வர்த்தகம் செய்யத் தொடங்கியுள்ளது.

இன்று பங்குச் சந்தையில் பிஎஸ்சி சென்செக்ஸில் பவர் கிரிட் கார்ப், டாடா ஸ்டீல், மாருதி சுசுகி, எம்&எம், இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் என்டிபிசி ஆகியவற்றின் பங்குகள் அதிக நஷ்டத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.

அதே சமயம் நிஃப்டி 50 இல் பவர் கிரிட் கார்ப், ஹிண்டால்கோ, டாடா மோட்டார்ஸ், அப்பல்லோ ஹாஸ்பிடல், டாடா ஸ்டீல் மற்றும் மாருதி சுசுகி ஆகியவற்றின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்