ஆப்நகரம்

பங்கில் பாதியை விற்ற எலான் மஸ்க்.. அதிர்ச்சியில் பங்குதாரர்கள்.. ஏன்? எதனால்?

எலான் மஸ்க் தனது டெஸ்லா நிறுவனத்தின் 6.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்.

Samayam Tamil 10 Aug 2022, 11:38 am
உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா (Tesla Inc) இன்ஸின் தலைமைச் செயல் அதிகாரியான எலான் மஸ்க் (Elon Musk) இந்நிறுவனத்திற்குச் சொந்தமான 6.9 மில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார்.
Samayam Tamil Elon Musk tesla


எலான் மஸ்க் அவர்கள் இம்மாதம் 5 ஆம் தேதி அன்றுதான் சுமார் 7.92 மில்லியன் பங்குகளைப் புதிதாக வாங்கினார். மேலும் ட்விட்டர் இன்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை அடுத்து 8.5 பில்லியன் டாலர் பங்குகளை அப்புறப்படுத்திய பின்னர் டெஸ்லா பங்குகளை விற்கும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் அடுத்த சில நாட்களிலேயே பெரிய அளவிலான டெஸ்லா பங்குகளை விற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி மே மாதம் டெஸ்லா பங்குகளுடன் இணைக்கப்பட்ட மார்ஜின் லோன் வாங்குவதற்காக பங்குகளை விற்கும் திட்டத்தை கைவிட்ட்டுள்ளார். மேலும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பங்கின் அளவுகளை 33.5 பில்லியன் டாலராகவும் உயர்த்தியுள்ளார்.

டெஸ்லா பங்குகளின் விலையானது மே மாதத்தில் குறைந்தபட்சத்திலிருந்து சுமார் 35% ஆக உயர்ந்துள்ளன. இருப்பினும் இந்த ஆண்டு இன்னும் 20% வரை விலை குறைந்துள்ளது.

எலான் மஸ்க் கடந்த 10 மாதங்களில் மட்டும் டெஸ்லாவின் சுமார் 32 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளார். இதனை அடுத்து அதன் பங்கின் விலையும் பல ஏற்ற, இறக்கங்களைக் கண்டு வருவதால் அதன் பங்குதாரர்கள் அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் உள்ளனர். ஆனால் தற்சமயம் அவர் எந்த காரணங்களுக்காக பங்குகளை விற்றுள்ளார் என்பது குறித்து தகவல்கள் ஏதுவும் தெரியவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்