ஆப்நகரம்

Today Trendy stock: இன்று பணமழைப் பொழியும் பங்கு இதுதான்.. உங்ககிட்ட இருக்கா?

இன்று பங்குச் சந்தையில் கிரானுல்ஸ் இந்தியா லிமிடெட் (Granules India) நிறுவனத்தின் பங்கானது ட்ரெண்டிங் பங்காக வலம் வருகிறது.

Samayam Tamil 30 Sep 2022, 12:12 pm
இன்று ரிசர்வ் வங்கியின் எம்பிசி கூட்டத்திற்குப் பிறகு இந்திய குறியீடுகள் அபாரமான ஏற்றத்தை கண்டுள்ளன. சந்தை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மத்திய வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் முதலீட்டாளர்களிடையே வலுவான வாங்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இன்று கிரானுல்ஸ் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்துள்ளன.
Samayam Tamil trendy stock


கிரானுல்ஸ் இந்தியா லிமிடெட் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட, உயர்-வளர்ச்சி கொண்ட மருந்து நிறுவனமாகும், இது முடிக்கப்பட்ட அளவுகள், மருந்து உருவாக்கம் இடைநிலைகள் மற்றும் API களை உற்பத்தி செய்கிறது.

இன்று பங்குச் சந்தையில் Granules India பங்குகளின் விலையானது அதன் போட்டியாளர் நிறுவனங்களை விடச் சிறப்பாகச் செயல்பட்டு அதிக லாபத்தை ஈட்டியுள்ளது. இப்பங்கானது அதன் முதலீட்டாளர்கள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை அளித்து இன்ரு பிரேக்-அவுட் ஸடாக்காகவும் ஜொலிக்கிறது.

https://tvid.in/sdk/embed/embed.html#apikey=tamilweba5ec97054033e061&videoid=1xr1bce9gg&height=360&width=640

இப்பங்கானது அதன் 30 நாட்களின் அடிப்படையில் காணும்பொழுது ரூ.300 முதல் ரூ. 320 க்கும் மேல் உயர்ந்துள்ளது. மேலும், பங்கு அதன் முந்தைய ஊசலாட்டத்தை விட அதிகமாக உயர்ந்து முதலீட்டாளர்களிடம் அதிக அளவு வாங்கும் பங்காகவும் வலம் வருகிறது.

இப்பங்கின் 14 கால தினசரி RSI (64.61) அதன் கீழ் மட்டங்களில் இருந்து உயர்ந்துள்ளது. மேலும் MACD மற்றும் OBV மேல்நோக்கி சென்று பங்குச் சந்தையில் ட்ரெண்டிங்காக உள்ளது

இன்று இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலையானது 4.70% உயர்ந்து ரூ.339.35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அதன் வளர்ச்சியைக் கண்காணிக்க வர்த்தகர்கள் இந்தப் பங்கை தங்கள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கலாம் எனக் கூறியுள்ளனர்.

Disclaimer: This above is third party content and TIL hereby disclaims any and all warranties, express or implied, relating to the same. TIL does not guarantee, vouch for or endorse any of the above content or its accuracy nor is responsible for it in any manner whatsoever. The content does not constitute any investment advice or solicitation of any kind. Users are advised to check with certified experts before taking any investment decision and take all steps necessary to ascertain that any information and content provided is correct, updated and verified.

அடுத்த செய்தி

டிரெண்டிங்