ஆப்நகரம்

Harsha Engineers Share: சூப்பர் லாபம் கொடுத்த ஹர்ஷா எஞ்சினியர்ஸ்.. பங்குதாரர்கள் ஹேப்பி!

இன்று ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு லிஸ்டிங் - பங்குதாரர்களுக்கு 36% லாபம்.

Samayam Tamil 26 Sep 2022, 11:03 am
ஹர்ஷா எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ அண்மையில் நடைபெற்றது. இதில் ஒரு பங்கு விலை 314 ரூபாய் முதல் 330 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
Samayam Tamil Harsha Engineers


நல்ல நிறுவனம், ஜிஎம்பி சுமார் 70% ஆக இருந்ததால் பலரும் ஹர்ஷா எஞ்சினியர்ஸ் ஐபிஓவில் விண்ணப்பித்தனர். இன்று பங்குச் சந்தையில் ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு பட்டியலிடப்பட இருந்த நிலையில் ஜிஎம்பி சரிந்தது.

இதையடுத்து இன்று ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு விலை 444 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. ஐபிஓவில் ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு வாங்கியவர்களுக்கு சுமார் 36% லாபம் கிடைத்துள்ளது. இன்று பங்குச் சந்தை சரிந்து வரும் சூழலிலும் ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பங்கு லாபத்தை கொடுத்துள்ளது.

சென்னையில் ரெடியாகும் ஐபோன் 14.. அடுத்த சில நாட்களில் மெகா சர்பிரைஸ்!
ஹர்ஷா எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் தொழில் என்ன? குஜராத்தை சேர்ந்த ஹர்ஷா எஞ்சினியர்ஸ் நிறுவனம் பியரிங் கேஜ் உற்பத்தியில் இந்தியாவிலேயே மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. உலகளவிலும் பியரிங் கேஜ் துறையில் ஹர்ஷா எஞ்சினியர்ஸ் நிறுவனத்துக்கு 5% பங்கு உள்ளது.

இந்நிறுவனத்துக்கு அகமதாபாத் அருகே உற்பத்தி ஆலைகள் உள்ளன. இதுபோக, ஹர்ஷா எஞ்சினியர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் வாயிலாக சீனாவிலும் உற்பத்தி செய்து வருகிறது. இதேபோல ருமேனியாவிலும் இன்னொரு துணை நிறுவனத்தை வைத்து ஹர்ஷா எஞ்சினியர்ஸ் பியரிங் கேஜ் உற்பத்தி செய்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்