ஆப்நகரம்

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் முதல் 10 நிறுவனங்கள்.. ரிலையன்ஸ், டாடா டாப்!

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் 10 நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 22 May 2022, 11:32 am
2022 மார்ச் காலாண்டு மற்றும் நிதியாண்டு வருவாய் சீசன் முடிவுற்ற நிலையில். இந்தியா நிறுவனங்களுக்கு இந்த ஆண்டு பெரும்பாலும் மீட்சியான ஆண்டாக உள்ளது. இருப்பினும், இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில், நிறுவனங்கள் உள்ளீட்டு செலவு அழுத்தத்தை எதிர்கொண்டன, பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் எண்ணிக்கையை மேம்படுத்தி வெற்றிகண்டன. அதன்படி, இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் 10 நிறுவனங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
Samayam Tamil profitable


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் | லாபம்: ரூ.67,565 கோடி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது. இந்த ஆண்டில் நிகர லாபம் ரூ. 67565 கோடியாகப் பதிவாகியுள்ளது, இது ஆண்டுக்கு (YoY) 27 சதவீதம் அதிகமாகும். தொலைத்தொடர்பு முதல் சில்லறை வர்த்தகம் என அனைத்து பிரிவுகளிலும், ஆண்டில் கிட்டத்தட்ட அனைத்து துறைகளிலும் அதன் செயல்திறனை மேம்படுத்தியது. இது 48 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

டாடா ஸ்டீல் | லாபம்: ரூ.41,100.16 கோடி
டாடா குழும நிறுவனம், இந்த நிதியாண்டில் பொருட்களின் விலையில் ஏற்பட்ட உயர்வை அதிகம் பயன்படுத்தியது. இதனால், 422.74 சதவீதம் லாபம் அதிகரித்து ரூ.41100.16 கோடியாக உள்ளது. நிறுவனம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஐ விஞ்சி, அதிக லாபம் ஈட்டும் டாடா குழும நிறுவனமாகவும் உருவெடுத்தது. இந்த ஆண்டில் அதன் விற்பனை 57 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் | லாபம்: ரூ.38,449 கோடி
ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியை கண்டு வரும் டாடா குழுமம் இந்த ஆண்டும் அதன் சிறப்பான செயல்திறனைத் தொடர்ந்தது. ஐடி துறையில் லாபம் 18 சதவீதம் அதிகரித்து ரூ.38449 கோடியாக இருந்தது. இதன் விற்பனை 17 சதவீதம் உயர்ந்துள்ளது. டாடா குழுமத்தின் சமீபத்திய டிஜிட்டல் முயற்சிகளை ஆதரிப்பதில் நிறுவனம் முக்கிய பங்காற்றுகிறது.

ஹெச்டிஎஃப்சி வங்கி | லாபம்: ரூ.38,150.9 கோடி
இந்தியாவிலேயே மிகவும் மதிப்புமிக்க வங்கியாக உள்ள ஹெச்டிஎஃப்சி, தனது திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்து, ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீத லாப வளர்ச்சியைப் பதிவு செய்து அதன் நற்பெயரைத் தக்க வைத்துக் கொண்டது. 2022 நிதியாண்டில் ரூ.38150.90 கோடி லாபம் ஈட்டியுள்ளது. வங்கி அதன் அடுத்த கட்ட வளர்ச்சியை இயக்க கிராமப்புறங்களில் கவனம் செலுத்துகிறது. மேலும், வங்கி அடுத்த ஒரு வருடத்தில் ஹெச்டிஎஃப்சி நீண்ட காலத்திற்கு மதிப்பு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

பாரத ஸ்டேட் வங்கி | லாபம்: ரூ.36,356.17 கோடி
சொத்து அளவு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கி கடந்த நிதியாண்டில் ஐந்தாவது அதிக லாபம் ஈட்டிய நிறுவனமாகும். வருடத்தில் சறுக்கல்கள் மற்றும் ஒதுக்கீடுகள் கடுமையாகக் குறைந்ததால், அதன் லாபம் கிட்டத்தட்ட 50 சதவீதம் வளர்ச்சியடைந்தது.

ஐசிஐசிஐ வங்கி | லாபம்: ரூ.25,783.83 கோடி
தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ ஆண்டில் 28 சதவீத லாப வளர்ச்சியைப் பதிவுசெய்து ரூ.25783.83 கோடி லாபத்தைப் பதிவு செய்துள்ளது. சமீப காலமாக, பங்குச் சந்தையின் செயல்திறனில் ஹெச்டிஎஃப்சி வங்கி பின்தங்கியிருப்பதால், பங்குச் சந்தையில் குறைந்தபட்ச விருப்பமாக மாறியுள்ளது.

இந்தியன் ஆயில் | லாபம்: ரூ.24,491.04 கோடி
ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனம், ஆண்டு வருவாயின் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமாக உள்ளது. இது ரூ. 7.36 லட்சம் கோடியாக உள்ளது. இதன் அறிவிக்கப்பட்ட லாபத்தின் அடிப்படையில் ஏழாவது இடத்தில் உள்ளது. 2022 நிதியாண்டில், தேர்தல் காரணமாக எரிபொருள் விலையை ஏறக்குறைய 4 மாதங்களுக்கு உயர்த்துவதை நிறுத்த வேண்டியிருந்தாலும், அதன் லாபம் 19 சதவீதம் உயர்ந்து ரூ.24,491.04 கோடியாக இருந்தது.

வேதாந்தா | லாபம்: ரூ.23,709 கோடி
கனிமங்கள் மற்றும் பண்டங்களின் விலையில் ஏற்பட்ட ஏற்றத்தால், இந்தியாவின் முதல் 10 இலாபகரமான நிறுவனங்களில் சுரங்க நிறுவனம் ஒரு இடத்தை பிடித்தது. இதன் 2022 நிதியாண்டில் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 23709 கோடி என்று நிறுவனம் தெரிவித்துள்ளது, இது கடந்த ஆண்டை விட 58 சதவீதம் அதிகமாகும். இது இந்த ஆண்டில் 51 சதவீத விற்பனை வளர்ச்சியையும் அளித்துள்ளது.

இன்ஃபோசிஸ் | லாபம்: ரூ.23,709 கோடி

இந்த நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான லாபம் ரூ.22146 கோடியாக 14 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதிகரித்த டிஜிட்டல் முறை மற்றும் தொடர்ந்து வளர்ந்து வரும் ஒப்பந்த வெற்றிகளின் மூலம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதன் விற்பனை 21 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், நிறுவனம் வளர்ச்சியின் பெரும்பாலான அளவுருக்களில் அதன் பெரிய நிறுவனமான TCS ஐ தோற்கடித்துள்ளது.

ITC | லாபம்: ரூ.15,485.65 கோடி
எஃப்எம்சிஜி நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 15485.65 கோடியுடன் நாட்டின் 10வது அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது, இது ஆண்டுக்கு 16 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலத்தில் இதன் விற்பனை 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நிறுவனம் பொருளாதாரத்தில் மீட்பு மற்றும் சிகரெட் விற்பனையை அதிகரித்ததன் மூலம் பயனடைந்துள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்