ஆப்நகரம்

ரூ.874 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களுடன் கட்டுமானத்துறை நிறுவனம்... பங்குகள் 11% உயர்வு!

புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளளதன் காரணமாக பங்குகள் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 11 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது

Samayam Tamil 22 Jun 2022, 2:16 pm
JMC ப்ராஜெக்ட்ஸ் நிறுவனம் ரூ. 874 கோடி மதிப்பிலான புதிய ஆர்டர்களைப் பெற்றுள்ளளதன் காரணமாக பங்குகள் இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில் 11 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. 874 கோடி மதிப்பிலான ஆர்டரில், கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு உயர்மட்ட வைடக்ட் மற்றும் ஐந்து உயர்மட்ட ரயில் நிலையங்கள் ஆகியவை அடங்கும். இந்த ஆர்டரின் மதிப்பு ரூ.459 கோடியாகும். மேலும், ஒரு டேட்டா சென்டர் மற்றும் பி&எஃப் திட்டங்களுக்கான குடிமராமத்து பணிகளுக்கான ஆர்டர்களை ரூ.415 கோடிக்கு பெற்றுள்ளது.
Samayam Tamil jmc projects


புதிய ஆர்டர்கள் பற்றிய செய்தி குறித்து, JMC ப்ராஜெக்ட்ஸின் CEO & நிர்வாக இயக்குநர் S. K. திரிபாதி கூறுகையில், எங்கள் நகர்ப்புற இன்ஃப்ரா மற்றும் B&F வணிகத்தில் புதிய ஆர்டர் வெற்றிகளால் நாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும், தரவு மையத்தில் முதல் ஆர்டரில் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இது இந்த சந்தையில் பெரிய வாய்ப்பையும் மெட்ரோ ரயில் ஆர்டர் எங்கள் போர்ட்ஃபோலியோ பல்வகைப்படுத்தலை பலப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

இந்த மாறுபட்ட ஆர்டர்கள் வாடிக்கையாளர்களை விரிவுபடுத்தவும், உயர்-வளர்ச்சி உள்கட்டமைப்பு சந்தைகளில் முன்னிலையை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாக இருக்கும். தற்போதுள்ள இந்த ஆர்டர்கள், முன்னோக்கி செல்லும் வளர்ச்சியை அடைவதற்கான நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன என்று திரிபாதி மேலும் கூறினார்.

காலை 10:25 மணியளவில், பங்கு அதன் முந்தைய முடிவான ரூ.73.65 க்கு எதிராக 2.85 சதவீதம் உயர்ந்து ரூ.76.50 ஆக வர்த்தகமானது. பங்கு விலை ஒரு நாள் அதிகபட்சமாக ரூ.82ஐ எட்டியது.

ஜேஎம்சி ப்ராஜெக்ட்ஸ் இந்தியா, 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. கட்டுமானத் துறையில் செயல்படும் ரூ. 1,237.46 கோடி சந்தை மூலதனத்தைக் கொண்ட ஸ்மால்கேப் நிறுவனமாகும்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்