ஆப்நகரம்

தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் பங்குகளை வாங்கி குவித்த எல்ஐசி!

எல்ஐசி நிறுவனம் தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளது.

Samayam Tamil 30 Sep 2022, 4:10 pm
ரசாயன உற்பத்தி நிறுவனமான தீபக் நைட்ரைட் (Deepak Nitrite) நிறுவனத்தில் எல்ஐசி (LIC) நிறுவனம் கூடுதல் பங்குகளை வாங்கியுள்ளது. இதனால், தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு 5 விழுக்காட்டை தாண்டியுள்ளது.
Samayam Tamil deepak nitrite - lic


இதற்கு முன் தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் எல்ஐசிக்கு 4.977% பங்கு இருந்தது. அதாவது தீபக் நைட்ரைட் நிறுவனத்தின் 67,88,327 பங்குகள் எல்ஐசி நிறுவனத்திடம் இருந்தது. இப்போது தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் எல்ஐசிக்கு 68,58,414 பங்குகள் உள்ளன.

இதனால், தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் எல்ஐசி நிறுவனத்தின் பங்கு 5.028% ஆக உயர்ந்துள்ளது என எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது தீபக் நைட்ரைட் நிறுவனத்தில் கூடுதலாக 0.051% பங்குகளை வாங்கியுள்ளது எல்ஐசி.

Nykaa Bonus Share: நைகா போனஸ் பங்குகள்.. குடுகுடுவென உயர்ந்த பங்கு விலை!
ஒரு பங்கு 2074.49 ரூபாய் என்ற விலைக்கு தீபக் நைட்ரைட் பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. இன்று பங்கு வர்த்தகத்தில் தீபக் நைட்ரைட் பங்கு விலை 29.70 ரூபாய் உயர்ந்து 2040 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது.

தீபக் நைட்ரைட் நிறுவனம் ஆகானிக், இனார்கானிக் மற்றும் ஸ்பெஷாலிட்டி ரசாயனப் பொருட்களை உற்பத்தி செய்து வருகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்