ஆப்நகரம்

அமலாக்கத்துறை ரெய்டு.. மணப்புரம் பைனான்ஸ் பங்கு 12% சரிவு!

அமலாக்கத்துறை ரெய்டு விளைவாக இன்று மணப்புரம் பைனான்ஸ் பங்கு விலை 12% மேல் சரிந்துள்ளது.

Authored byவிக்னேஷ் பாபு | Samayam Tamil 3 May 2023, 2:26 pm
மணப்புரம் பைனான்ஸ் பங்கு (Manappuram Finance share) விலை இன்று ஒரே நாளில் 12% சரிவடைந்துள்ளது.
Samayam Tamil manappuram finance share
manappuram finance share


மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் கேரள மாநில திருச்சூரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், இன்று திருச்சூரில் உள்ள மணப்புரம் பைனான்ஸ் அலுவலகத்தில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

இதுமட்டுமல்லாமல் மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் புரமோட்டர் வி.பி.நந்தகுமாரின் இல்லத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த தகவல் வெளியானதை தொடர்ந்து மணப்புரம் பைனான்ஸ் பங்கு விலை 12% சரிந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமலேயே மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து 150 கோடி ரூபாய் டெபாசிட் தொகையை சட்டவிரோதமாக வசூலித்துள்ளதாக புகார் வந்துள்ளது. இதுகுறித்து அமலாக்கத்துறையினர் மணப்புரம் பைனான்ஸ் அலுவலகங்கள் மற்றும் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுமட்டுமல்லாமல் KYC விதிமுறைகளை கடைப்பிடிக்காமலேயே மணப்புரம் பைனான்ஸ் நிறுவனம் பெரிய பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் இன்று அமலாக்கத்துறை ரெய்டு நடந்து வருகிறது.

அமலாக்கத்துறை ரெய்டு குறித்து தகவல் வெளியானதை தொடர்ந்து மணப்புரம் பைனான்ஸ் பங்கு விலை படிப்படியாக சரிந்து 12% வரை குறைந்துள்ளது. இன்று பங்கு வர்த்தகத்தின்போது மணப்புரம் பைனான்ஸ் பங்கு விலை அதிகபட்சமாக 111.60 ரூபாய் வரை சரிந்துள்ளது.
எழுத்தாளர் பற்றி
விக்னேஷ் பாபு
நான் விக்னேஷ் பாபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை துறையில் உள்ள ஆர்வத்தால் கடந்த 5 ஆண்டுகளாக இத்துறையில் பணிபுரிந்து வருகிறேன். வர்த்தகம், பங்குச் சந்தை, பொருளாதாரம், அரசு கொள்கைகள், அரசியல் சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். விளக்க கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. தற்போது சமயம் தமிழில் Senior Digital Content Producerஆக பணிபுரிகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி

டிரெண்டிங்